Published : 08 Jun 2023 04:00 AM
Last Updated : 08 Jun 2023 04:00 AM
ஓசூர்: ஓசூர் அருகே சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 3-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓசூர் அருகே உத்தனப்பள்ளி, நாகமங்கலம், அயர்னப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் 3,034 ஏக்கர் நிலப்பரப்பில் 5-வது சிப்காட் அமைக்க விளை நிலங்களைக் கையகப்படுத்தும் பணி நடைபெற உள்ளது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து உத்தனப்பள்ளி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 5-ம் தேதி முதல் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று 154-வது நாளாக காத்திருப்புப் போராட்டமும், 3-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டமும் நடந்தது. விவசாயிகளின் உடல்நிலையைச் செவிலியர்கள் அவ்வப்போது பரிசோதனை செய்து வருகின் றனர்.
அதேபோல, வருவாய்த் துறை அதிகாரிகளும் விவசாயிகளை மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT