மதுரை - திருமோகூர் திருவிழா தகராறு சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு தமிழக அரசு நிதியுதவி

மதுரை - திருமோகூர் திருவிழா தகராறு சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு தமிழக அரசு நிதியுதவி
Updated on
1 min read

மதுரை: ஒத்தக்கடை திருமோகூர் திரு விழாவையொட்டி நடந்த தகராறு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் தீருதவித் தொகை வழங்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் 8 வீடுகள் சேதம் அடைந்ததற்கு இழப்பீட்டுத் தொகையாக தலா ரூ.14,800 மற்றும் 34 இருசக்கர வாகனங்கள், ஒரு வாகனம் சேதம் அடைந்ததற்கு ரூ.3,18,200, பாதிக்கப்பட்ட 4 பேருக்கு ரூ.2.50 லட்சம் என மொத்தம் 47 பேருக்கு ரூ. 5,83,000 காசோலையை ஒத்தக் கடை கிழக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் ஆட்சியர் சங்கீதா வழங்கினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in