Published : 08 Jul 2014 11:26 AM
Last Updated : 08 Jul 2014 11:26 AM

அண்ணாமலை பல்கலைக்கழக கட்டணம்: அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளுக்காக வசூலிக்கப்படும் கட்டணத்தையே சிதம்பரம் அண்ணாமலை பல் கலைக்கழகத்திலும் வசூலிக்கக் கோரி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வேலூர் மாவட்டம் பாச்சல் கிராமத்தைச் சேர்ந்த கே.ரமேஷ் குமார் ராஜா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு:

கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு பயின்ற எனது மகள் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்வில் 1200-்கு 1161 மதிப் பெண்களையும், எம்பிபிஎஸ் படிப்புக்காக 196.75 கட்-ஆஃப் மதிப்பெண்களையும் பெற் றுள்ளார்.

சிதம்பரம் அண்ணாமலை பல் கலைக்கழகத்தில் சேர விண்ணப் பித்த எனது மகளுக்கு எம்பிபிஎஸ் சேர்க்கை கிடைத்துள்ளது. எனினும் விடுதிக் கட்டணம் ரூ.85 ஆயிரம் உட்பட ஆண்டுக்கு மொத்தம் ரூ.6 லட்சத்து 39 ஆயிரத்து 370 கட்டணமாக நிர்ணயித்துள்ளனர்.

எனது மகள் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்தாக வேண்டும் என்பதற்காக இந்த ஆண்டுக் கான கட்டணத்தை செலுத்தி விட்டேன். எனினும் 5 ஆண்டு களில் மொத்தம் ரூ.27 லட்சத்து 71 ஆயிரம் செலுத்த வேண்டும்.

விவசாயத் தொழிலா ளியான எனக்கு ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் மட்டுமே வருமானம் கிடைத்து வரும் நிலையில் இந்தத் தொகையை செலுத்துவது மிகவும் கடினம்.

அண்ணாமலை பல்கலைக் கழகம் தற்போது தமிழக அரசால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசால் நடத்தப்படும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரத்து 500 மட்டுமே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அரசால் நிர்வகிக் கப்படும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மட்டும் இவ்வாறு அதிகக் கட்டணம் வசூலிப்பது சரியல்ல. இதனால் எனது மகள் அடுத்தடுத்த ஆண்டு களில் படிப்பைத் தொடர்வது பாதிக்கப்படலாம்.

ஆகவே, எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத் தையே அண்ணாமலை பல் கலைக்கழகத்திலும் வசூலிக்கு மாறு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று ரமேஷ் குமார் ராஜா தனது மனுவில் கோரி யுள்ளார்.

இந்த மனு நீதிபதி எம்.சத்திய நாராயணன் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக் கறிஞர் கே.பாலு ஆஜரானார். அப்போது, இந்த மனு தொடர்பாக தமிழக அரசு மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x