சேலம், மதுரைக்கு புதிய ஆணையர்கள் | 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - பணீந்திர ரெட்டிக்கு கூடுதல் பொறுப்பு

சேலம், மதுரைக்கு புதிய ஆணையர்கள் | 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - பணீந்திர ரெட்டிக்கு கூடுதல் பொறுப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் மற்றும் மதுரை மாநகராட்சிகளுக்கு புதிய ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தலைமைச் செயலர் வெ.இறையன்பு வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக போக்குவரத்துத் துறை செயலர் கே.பணீந்திர ரெட்டி, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இயற்கை வளங்கள் துறையின் செயலர் பொறுப்பையும் கூடுதலாகக் கவனிப்பார். மேலும், ஏற்கெனவே கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக இருந்தஎ.சண்முகசுந்தரம், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநராக மாற்றப்பட்டார்.

தற்போது இந்த உத்தரவு ரத்துசெய்யப்பட்டு, அவர் போக்குவரத்துத் துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். போக்குவரத்துத் துறை ஆணையராக இருந்த எல்.நிர்மல்ராஜ், புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையராகவும், அப்பதவியில் இருந்த ஜெ.ஜெயகாந்தன் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநகராட்சி ஆணையர்கள்: அப்பதவியில் இருந்த டி.ரத்னா, ஆயத்தீர்வைத் துறை இயக்கு நராகவும், ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநராக இருந்த கே.ஜெ.பிரவீன் குமார், மதுரை மாநகராட்சி ஆணையராக நியமிக் கப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே அப்பதவியில் இருந்த சிம்ரன் ஜீத் சிங் கலோன், சென்னை குடிநீர் வாரிய செயல் இயக்குநராகவும், சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.பாலச்சந்தர், சேலம் மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in