Published : 07 Jun 2023 05:54 AM
Last Updated : 07 Jun 2023 05:54 AM

பாலசோர் விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு தளா்வுகளை அறிவித்தது எல்ஐசி - உதவி மையங்களும் அமைக்கப்பட்டன

சென்னை: ஒடிசா மாநிலம் பாலசோரில் ஜூன் 2-ம் தேதி ஏற்பட்ட ரயில் விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்கவும்,உரிமங்களை விரைந்து வழங்கவும் எல்ஐசி நிறுவனம் உறுதி பூண்டுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்குத் தனது இரங்கலைத் தெரிவித்துள்ள எல்ஐசி தலைவர் சித்தார்த் மொஹந்தி, அவர்களின் குடும்பத்தினரின் துயரில் பங்கேற்பதாகத் தெரிவித்துள்ளார்.

இறப்பு சான்றிதழ்: எல்ஐசி பாலிசிதாரர்களுக்கும், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதிபீமா யோஜனா திட்ட பயனாளி களுக்கும் உரிமை தொகை கோருவதில் பல்வேறு தளர்வுகளை எல்ஐசி தலைவர் அறிவித்துள்ளார். இறப்புச் சான்றிதழுக்குப் பதிலாக, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ள, விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரம், காவல் துறை அல்லதுமத்திய மற்றும் மாநில அரசுகள்அறிவித்துள்ள உயிரிழந்தவர் களின் விவரங்கள் இறப்புச் சான்றிதழாகக் கருதப்படும்.

கோட்ட அளவிலும், கிளைஅளவிலும் உரிமை கோருபவர்களுக்கு உதவவும், உரிமை தொகை தொடர்பாக விசாரிக்கவும், மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

துரித சேவை: உரிமை கோருபவர்களுக்கு உதவ மற்றும் பாதிக்கப்பட்டவர் களின் உரிமங்களை விரைந்துபட்டுவாடா செய்ய அனைத்துமுயற்சிகளும் மேற்கொள்ளப்படும். உாிமைதாரர்கள் மேலும் விவரங்கள் அறிய அருகிலுள்ள கிளை/கோட்ட வாடிக்கையாளர் சேவை மையங்களை அணுகலாம்.

உரிமம் கோருபவர்கள் 022-68276827 என்ற எண்ணிலும் அழைப்பு மையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு எல்ஐசி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x