கோவை - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதலாக 3 பெட்டிகள் இணைப்பு

கோவை - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதலாக 3 பெட்டிகள் இணைப்பு
Updated on
1 min read

கோவை: கோவை - திருப்பதி இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதலாக 3 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “கோவையில் இருந்து செவ்வாய், வியாழன், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 6.10 மணிக்கு புறப்படும் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:22616), அன்றைய தினம் பகல் 1.20 மணிக்கு திருப்பதி சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில், திருப்பதியில் இருந்து திங்கள், புதன், வியாழன், சனிக் கிழமைகளில் மதியம் 3 மணிக்கு கோவை புறப்படும் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 22615), அன்றைய தினம் இரவு 10.45 மணிக்கு கோவை வந்தடைகிறது. பக்தர்கள், பொதுமக்கள் இடையே இந்த ரயில்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதால், கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்தன.

பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று, இந்த ரயில்களில் கூடுதலாக 3 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in