Last Updated : 24 Oct, 2017 02:28 PM

 

Published : 24 Oct 2017 02:28 PM
Last Updated : 24 Oct 2017 02:28 PM

விஜய் குறித்த சர்ச்சை: ஹெச்.ராஜாவுக்கு கனிமொழி கேள்வி

விஜய் குறித்த சர்ச்சை தொடர்பாக பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஹெச்.ராஜாவுக்கு திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

'மெர்சல்' படத்தின் வசனங்கள் சர்ச்சையானதிலிருந்து, தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்யை கடுமையாக விமர்சித்து வருகிறார் ஹெச்.ராஜா.

ஜோசப் விஜய் என்று குறிப்பிட்டதிலிருந்தே, அவரை ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக சாடி வருகிறார்கள். சமீபத்தில் மேலும் சர்ச்சையை உருவாக்கும் வகையில், விஜய்யின் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பத்திரிகை நிறுவனத்திற்கு விஜய் எழுதிய கடிதம் ஆகிய இரண்டையும் பதிவிட்டு 'உண்மை கசப்பானது' என்று ட்வீட் செய்தார் ஹெச்.ராஜா. இதனால் மீண்டும் சர்ச்சை உருவானது.

இந்த சர்ச்சை குறித்து திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

முக்கியமான பொருளாதாரப் பிரச்சினையைப் பேசியதற்காக ஒருவரின் மதத்தைக் கொண்டு வருவது மூர்க்கமான, கொடூரமான செயல். ஜோசப் விஜய்யோ, ஜெய்ராம் விஜய்யோ, யார் கேள்வி கேட்டால் என்ன?

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x