Published : 07 Jun 2023 06:02 AM
Last Updated : 07 Jun 2023 06:02 AM
சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் பொதுச் செயலாளர் கே.கர்சன், போக்குவரத்து செயலருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஓய்வுபெறும் நாளிலேயே அனைத்து ஓய்வுகால பலன்களையும் வழங்க வேண்டும். பணியில் மரணமடைந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு பயன்களை காலம்தாழ்த்தாமல் வழங்க வேண்டும். கடந்த 2015-ம்ஆண்டு நவம்பர் முதல் வழங்க வேண்டிய91 மாத அகவிலைப்படி உயர்வை விரைந்துவழங்க வேண்டும். மருத்துவப் படி ரூ.300உயர்த்தி வழங்க வேண்டும்.
குடும்ப ஓய்வூதியர்களுக்கு மருத்துவப்படி வழங்க வேண்டும். அனைத்து ஓய்வூதியர்களுக்கு மருத்துவகாப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7,850 ஓய்வூதியமாக நிர்ணயிக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஓய்வூதியர் குறைதீர் கூட்டத்தை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT