கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதி கேட்டு முதல்வருக்கு கடிதம்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதி கேட்டு முதல்வருக்கு கடிதம்
Updated on
1 min read

சென்னை: அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அ.அன்பழகன் தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதம்: கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் 51 டிராவல்ஸ் அலுவலகங்கள், 80 பஸ் பே, 151 நிறுத்தங்கள், 14 பயணிகள் காத்திருப்பு கூடம், 22 கடைகள் உள்ளன. இங்கு தென்தமிழகத்துக்கு பேருந்துகளை இயக்கும் 240 நிறுவனங்கள் உள்ளிட்ட 270 நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றின் மூலம் வார நாட்களில் 850 பேருந்துகளும், வார இறுதி, விழாக் காலங்களில் 1,450 பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் கிளாம்பாக்கத்திலோ 62 பஸ் பே, 130 நிறுத்தங்கள் மட்டுமே வழங்கப்படவுள்ளன. எனவே, திறக்கப்படவுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலோ, அதன் அருகிலோ ஆம்னி பேருந்துகளுக்கு குறைந்தளவு 500 நிறுத்தங்கள் போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து தர வேண்டும். அதன்பிறகு, கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தை முற்றிலும் காலி செய்து கிளாம்பாக்கத்துக்கு மாற்றலாம் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in