

சென்னை: ஒடிசா ரயில் விபத்தில் பல உயிர்களை காப்பாற்ற காரணமான தமிழகத்தைச் சேர்ந்த தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர் வெங்கடேசனுக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘‘ஒடிசா ரயில் விபத்தில் பல உயிர்களைக் காப்பாற்ற காரணமாக இருந்துள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர் வெங்கடேசன்.
உரிய நேரத்தில் அவர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அருகில் இருக்கும் தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் விரைந்து வந்ததால் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. மிக அதிர்ச்சிகரமான நேரத்தில் தெளிவாகவும் விரைவாகவும் செயல்பட்ட அவரைப் பாராட்டு கிறேன்” என்றார்.