மாணவன் பிரசன்னா
மாணவன் பிரசன்னா

பட்டத்தை பிடிக்க முயன்றபோது மாடியில் இருந்து விழுந்த மாணவன் உயிரிழப்பு: உடல் உறுப்புகளை தானம் வழங்கிய பெற்றோர்

Published on

சென்னை: சென்னை சூளைமேடு, பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் டெய்லர் தண்டபாணி. இவருக்கு இரு மகன்கள். இளைய மகன் பிரசன்னா (13).அரும்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பிலிருந்து 8-ம் வகுப்புக்குத் தேர்ச்சி பெற்றுள்ளார்.

இவர், நேற்று முன்தினம் மாலை சூளைமேடு பெரியார் பாதை வழியாகச் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக அறுந்த பட்டம் ஒன்று பறந்து வந்தது. அதைக் கண்ட பிரசன்னா அதைப் பிடிக்க எண்ணினார்.

இதற்காக, தனது சைக்கிளை அங்கேயே நிறுத்தி விட்டு, பட்டம் பறந்து வந்த பெருமாள் என்பவரது வீட்டின் 2-வது தளத்துக்கு சென் றார்.

பட்டம் பிடிக்கும் ஆர்வத்தில் தடுமாறிய மாணவன் 2-வது மாடியிலிருந்து கீழே விழுந்து பலத்த காயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இச்சம்பவம், சூளை மேடு பகுதியில் சோகத்தை ஏற் படுத்தியது.

இந்நிலையில், உயிரிழந்த பிரசன்னாவின் கண்கள் மற்றும் உடல் உறுப்புகளை அவரது பெற்றோர் தானம் கொடுப்பதாக எழுதிக் கொடுத்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in