Published : 16 Oct 2017 01:16 PM
Last Updated : 16 Oct 2017 01:16 PM

கிருஷ்ணகிரி அருகே பன்றிக் காய்ச்சலுக்கு ஒருவர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே சின்னதாளப்பள்ளி கிராமத்தில் பன்றிக் காய்ச்சல் காரணமாக வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ளது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தயுள்ளது.

கிருஷ்ணகிரி அருகே உள்ள சின்னதாளப்பள்ளி கிராமத்தை சேர்ந்த முனிராஜ்(40). எலக்ட்ரானிக் வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். முனிராஜ் ஊத்தங்கரை பகுதியில் உள்ள தனியார் புளியம் கொட்டை உடைக்கும் ஆலையில் வேலை செய்து வந்தார். இரண்டு வாரமாக காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்தார்.

கடந்த இரண்டு வாரமாக தொடர் காய்ச்சல் மற்றும் சளியால் முனிராஜ் அவதிப்பட்டு வந்துள்ளார். தருமபுரி கிருஷ்ணகிரி பெங்களூர் போன்ற அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் காய்ச்சல் குறையவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் தனியார் மருத்துவமனை கடந்த 12ம்தேதி முனிராஜ் அனுமதிக்கபட்டார். அங்கு அவருக்கு மூச்சுத் திணறல், சளி, காய்ச்சல் இருந்தது. அவரது ரத்தமாதிரியை சோதனை செய்ததில் பன்றிக் காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. சோதனை முடிவுகள் வெளிவந்த 5 மணி நேரத்தில் முனிராஜ் நேற்று இரவு உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பன்றிக் காய்ச்சல் காற்று மூலம் பரவும் என்பதால் அவரது உடலை கிரமத்திற்குள் கொண்டு வந்தால் காய்ச்சல் பரவும் என்பதால் கிராமங்களுக்கு உடலை எடுத்து செல்லாமல் ஊருக்கு வெளியே மயானம் அருகே வைத்து உள்ளனர்.

உடனடியாக அந்த கிராமத்தில் தமிழக அரசு காய்ச்சலை தடுக்க மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x