தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: போக்குவரத்துத் துறை ஆணையராக சண்முக சுந்தரம் நியமனம்

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: போக்குவரத்துத் துறை ஆணையராக சண்முக சுந்தரம் நியமனம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்துத் துறை ஆணையராக சண்முக சுந்தரத்தை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: போக்குவரத்துத் துறை செயலாலர் பணீந்திரரெட்டிக்கு இயற்கை வளங்கள் துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்படுகிறது. போக்குவரத்துத் துறை ஆணையராக சண்முக சுந்தரமும், புவியியல் மற்றும் கனிமவளத் துறை இயக்குநராக நிர்மல்ராஜ் நியமிக்கப்படுகின்றனர்.

சமூக நலத்துறை மற்றும் பெண்கள் அதிகாரமளிப்புத் துறை ஆணையராக ஜெயகாந்தனும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையராக ரத்னாவும் நியமிக்கப்படுகின்றனர்.

மதுரை மாநகராட்சி ஆணையராக கே.ஜே.பிரவீண் குமாரும், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் நீரகற்று வாரியத்தின் செயல் இயக்குநராக சிம்ரன்ஜித் சிங்கும்,
சேலம் மாநகராட்சி ஆணையராக எஸ்.பாலசந்தரும் நியமிக்கப்படுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in