திருவாவடுதுறை ஆதீனம் பெயரில் சமூக வலைதளங்களில் போலியான செய்தி

திருவாவடுதுறை ஆதீனம் பெயரில் சமூக வலைதளங்களில் போலியான செய்தி
Updated on
1 min read

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே பழமை வாய்ந்த திருவாவடுதுறை ஆதீன திருமடம் உள்ளது. இந்த ஆதீனத்தின் 24-வது குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இருந்து வருகிறார்.

இவர் நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவில் பங்கேற்று, பிரதமரிடம் செங்கோல் வழங்கினார்.

இந்நிலையில், செங்கோல் வழங்கிய நிகழ்வையும், ஒடிசா ரயில் விபத்தையும் தொடர்புபடுத்தி திருவாவடுதுறை ஆதீன கர்த்தர் கூறியதாக போலியான செய்தி நேற்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

இதையடுத்து, ஆதீனத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் போலியான செய்தியை சமூக வலைதளங்களில் பதிவிட்ட நபர்களைக் கண்டுபிடித்து, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட எஸ்.பி.யிடம் ஆதீன பொது மேலாளர் ராஜேந்திரன் நேற்று புகார் மனு அளித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in