விநாயகர் சிலை அகற்றப்பட்டதாக சர்ச்சை: அவதூறு பரப்பியதாக வழக்கு

புதுக்கோட்டை ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை.
புதுக்கோட்டை ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை.
Updated on
1 min read

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் இருந்த விநாயகர் சிலை அகற்றப்பட்டதாக சர்ச்சை எழுந்தது குறித்து நகர காவல் நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழ் நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் இருந்த விநாயகர் சிலை அகற்றப்பட்டு நேற்று முன்தினம் அதே வளாகத்தில் வேறு இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும், அப்போது, சிலை சேதம் அடைந்ததாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்தத் தகவலை மாவட்ட நிர்வாகம் மறுத்தது.

இந்நிலையில், புதுக்கோட்டை தெற்கு கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் இருந்த விநாயகர் சிலை அகற்றப்பட்டதாக அவதூறான தகவலை பரப்பிய நபர் மீது நகர காவல் நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், சமூக வலைதளங்களில் அவதூறாக தகவல் பரப்பியவர்களின் செல்போன் எண்களை சேகரித்து, சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் நகர காவல் நிலைய போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in