

குன்றத்தூர்: குன்றத்தூர் நகராட்சியில் சேகரமாகும் குப்பையை, மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து வாங்குவதற்கு ஏதுவாக ரூ.30 லட்சம் மதிப்பில் 15 பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இவற்றை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
குன்றத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளில் தினமும் 16 முதல் 18 டன் அளவுக்கு குப்பை சேகரிக்கப்படுகிறது. நகராட்சி தூய்மைப் பணியாளர்களால் சேகரிக்கப்பட்டு குப்பை, கிடங்குகளில் கொட்டப்படுகிறது. இவற்றில் 70 சதவீதம் வீடுகளில் சேகரிக்கப்படுகிறது. இதற்காக 15 பேட்டரி வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மொத்தமுள்ள 30 வார்டுகளுக்கும் சேர்ந்து 15 வாகனங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுவதால், குப்பை சேகரிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, நகராட்சி சார்பில் ரூ 30 லட்சம் மதிப்பில் 15 புதிய பேட்டரி குப்பை சேகரிப்பு வாகனங்கள் வாங்கப்பட்டன. இவற்றின் பயன்பாட்டை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று முன்தினம் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.