Published : 05 Jun 2023 06:16 AM
Last Updated : 05 Jun 2023 06:16 AM
சென்னை: துரைப்பாக்கத்தில் உள்ள சென்னையூரோலஜி அண்டு ரோபோடிக்ஸ்இன்ஸ்டிடியூட் (க்யூரி) மருத்துவமனையில் 600-க்கும் மேற்பட்டரோபோடிக்ஸ் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளதை முன்னிட்டு நேற்று சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஸ்ரீராம் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவன இயக்குநர் அகிலாசீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மருத்துவமனை தலைவர் பி.பி.சிவராமன்தலைமை வகித்தார். மருத்துவமனை இயக்குநரும், ரோபோடிக்ஸ் அறுவை சிகிச்சை நிபுணருமான அனந்தகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
இதில், 600-க்கும் மேற்பட்டரோபோடிக்ஸ் அறுவை சிகிச்சைகளில் பங்கேற்ற மருத்துவக் குழுவினர் 15 பேருக்கு, அகிலா சீனிவாசன்சான்றிதழ்கள் வழங்கினார்.
இதுகுறித்து மருத்துவமனை இயக்குநர் அனந்தகிருஷ்ணன் கூறியதாவது: ரோபோடிக்ஸ் அறுவைசிகிச்சை மூலம் 600 பேரின்உடல்நலம் மேம்படுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவற்றில் சிறுநீரகவியல் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சைகள் தான் அதிகம்மேற்கொள்ளப்பட்டன.
சிறுநீரகவியல் புற்றுநோயைப் பொறுத்தவரை ரோபோடிக்ஸ் அறுவை சிகிச்சைதான் சிறந்ததாகும். இந்த சிகிச்சைமேற்கொள்ளும் நோயாளிகள்,48 மணி நேரத்தில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிடலாம். உடனே எழுந்து நடக்கவும் முடியும்.
குறிப்பாக, சிகிச்சைக்கு பின்னர்புற்றுநோயின் விளைவுகள் குறைந்து, உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும். எனவே, மக்கள் சிறுநீரகவியல் புற்றுநோய் குறித்தும், ரோபோடிக்ஸ் அறுவை சிகிச்சை குறித்தும்தெரிந்துகொள்ள வேண்டும்.
சிறுநீரில் ரத்தம் கலந்து வந்தால், அதை சாதாரணமாக கருதாமல், உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும். குறிப்பாக, ஆண்டுதோறும் 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் பிஎஸ்ஏ என்ற ரத்தப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். பிஎஸ்ஏ அளவு அதிகமாக இருந்தால் புற்றுநோய்க்கான வாய்ப்புகள் அதிகம். இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT