Published : 05 Jun 2023 06:20 AM
Last Updated : 05 Jun 2023 06:20 AM
சென்னை: ஒடிசா சென்றடைந்த தமிழகபாஜக குழுவினர், பாலசோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தை தொடர்ந்து, தமிழக பாஜக சார்பில் கே.ரவிச்சந்திரன், கே.பி.ஜெயக்குமார், ஏ.என்.எஸ்.பிரசாத் ஆகிய 3 பேர் கொண்ட குழு நேற்று முன்தினம் சம்பவ இடத்துக்கு சென்றடைந்தது.
விபத்தில் காயமடைந்து பாலசோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை சந்தித்து, அவர்களுக்குத் தேவையான உதவிகளை இக்குழு ஒருங்கிணைந்து செய்து கொண்டிருக்கிறது.
விபத்தில் உயிரிழந்தவர்களிலும், காயமடைந்தவர்களிலும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என்பதை இவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். தற்போது முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணம் செய்தவர்களை அடையாளம் காணும் பணிநடைபெற்று வருகிறது.
அப்பணி நிறைவு பெறும்வரை, தமிழகபாஜக குழு அங்கு தங்கியிருந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு தேவையான உதவிகளை ஒருங்கிணைத்து செய்வார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT