Published : 01 Oct 2017 11:27 AM
Last Updated : 01 Oct 2017 11:27 AM

மேட்டூர் அணை நீர்மட்டம் 93 அடி

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 41,300 கனஅடியில் இருந்து 28,558 கனஅடியாக சரிந்தது. கடந்த இரு நாட்கள் நீர்வரத்து அதிகம் இருந்த நிலையில் நேற்று நீர்மட்டம் 93 அடியானது.

சேலம், தருமபுரி மாவட்ட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு 2 தினங்களுக்கு முன்னர் விநாடிக்கு 48,000 கனஅடிக்கு மேல் நீர்வரத்து இருந்தது. இதனால், 2 நாட்களில் அணை நீர்மட்டம் 8 அடி உயர்ந்தது. நேற்று முன்தினம் மாலை நீர்மட்டம் 92 அடியை எட்டியது.

நீர் வரத்து சரிவு

இதனிடையே, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நேற்று முன்தினம் மதியத்துக்கு மேல் நீர்வரத்து படிப்படியாக குறையத் தொடங்கியது. நேற்று முன்தினம் மதியம் விநாடிக்கு 41,300 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 28,558 கனஅடியாக குறைந்தது. நீர்வரத்து குறைந்ததால் அணை நீர்மட்டம் உயரும் வேகம் குறைந்துள்ளது.

நீர் இருப்பு 55.8 டிஎம்சி

நேற்று மதியம் நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 93 அடியானது. அணையில் இருந்து குடிநீருக்காக விநாடிக்கு 1000 கனஅடி திறக்கப்பட்டது. நீர் இருப்பு 55.815 டிஎம்சியாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x