கோவையில் அனுமதியற்ற 81 பதாகைகள், 4 சாரங்கள் அகற்றம்

கோவையில் அனுமதியற்ற 81 பதாகைகள், 4 சாரங்கள் அகற்றம்

Published on

கோவை: கோவை கருமத்தம்பட்டியில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் விளம்பரப் பதாகை அமைக்கும் பணியின்போது சாரம் சரிந்து 3 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து கோவை மாவட்டம் முழுவதும் அனுமதியற்ற, அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சிப் பகுதியில் பொள்ளாச்சி சாலை, பேரூர் சாலை, போத்தனூர் சாலை, கோவைப்புதூர் சாலை, பாலக்காடு சாலை, அவிநாசி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள அனுமதியற்ற விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் கூறும்போது, ‘‘வடக்கு மண்டலத்தில் 26, கிழக்கு மண்டலத்தில் 8, மேற்கு மண்டலத்தில் 16, தெற்கு மண்டலத்தில் 24, மத்திய மண்டலத்தில் 11 என மொத்தம் 81 அனுமதியற்ற விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டுள்ளன. தவிர, மத்திய மண்டலத்தில் மட்டும் 4 விளம்பர பதாகைகள் அமைக்கப்படும் இரும்பு சாரங்கள் அகற்றப்பட்டுள்ளன. அனுமதியற்ற விளம்பரப் பலகைகள் அகற்றும் பணி தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது,’’ என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in