Published : 12 Jul 2014 01:59 PM
Last Updated : 12 Jul 2014 01:59 PM

வேட்டியை அவமதிக்கும் கிளப்களை தடை செய்ய வேண்டும் - ராம்தாஸ் வலியுறுத்தல்

வேட்டி கட்டியவர்களை அடிமை போலக் கருதி கிளப்களில் அனுமதி மறுக்கப்படுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது. தமிழர் களின் பாரம்பரிய உடைகளுக்கு மரியாதை அளிக்காத கிளப் களுக்கு தடை விதிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் சனிக் கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னையில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப்பில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க வந்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.பரந்தாமன், மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி ஆகியோர் அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் தமிழரின் பாரம் பரிய உடையான வேட்டி அணிந்திருந்ததுதான் இதற்கு காரணமாம். உயர் நீதிமன்ற நீதிபதியும் மூத்த வழக்கறிஞரும் அவமதிக்கப்பட் டிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

சென்னையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப் மட்டுமின்றி, ஜிம்கானா கிளப், மெட்ராஸ் கிளப், போட் கிளப், மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிளப்களில் வேட்டிக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இங்கு வேட்டி அணிந்து செல்பவர் கள் யாராக இருந்தாலும் அவர் களுக்கு அனுமதி கிடையாது. அதே நேரத்தில் மேலை நாகரிக உடை அணிந்து செல்பவர்களுக்கு அனுமதி உண்டு. மொத் தத்தில் மனிதர்களை மதிக்காமல் அவர்களது ஆடைகளுக்கு மதிப்பளிக்கும் மோசமான கலாச்சாரத் துக்கு இந்த அமைப்புகள் அடிமை யாகி வருகின்றன.

வேட்டிக்கு தடை விதித்துள்ள கிளப்களில் பெரும்பாலானவை வெள்ளையர்களால் தொடங்கப் பட்டவை. ஆங்கிலேயரிடம் இருந்து நாம் விடுதலை பெற்று 68 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், ஆங்கிலேயர் உருவாக்கிய கிளப்கள் பெரும்பாலும் தமிழர்க ளின் கைகளுக்கு வந்துவிட்ட நிலையில், தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்தவர்களை அடிமை போலக் கருதி உள்ளே நுழைய விடாமல் அனுமதி மறுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இப்போக்கு கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தமிழகத்துக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டவர்கூட தமிழர்களின் பண்பாட்டைப் பற்றி அறிந்து வேட்டி, புடவை போன்ற ஆடைகள் அணிவதை பெருமையாகக் கருதுகிறார்கள். ஆனால், தமிழகத்தில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அவமதிக்கப்படுவது மன்னிக்க முடியாத குற்றம். தமிழுக்கும், தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய உடைகளுக்கும் மரியாதை அளிக்காத கிளப்களை தடை செய்யும் வகையில் அதற் குரிய சட்டங்களில் தமிழக அரசு உடனடியாக திருத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

‘ஐயா’வை வழிமொழிந்த அன்புமணி

பாமக நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் சென்னை கிளப் ஒன்றில் உறுப்பினராக உள்ளார். வேட்டிகளை அவமதிக்கும் கிளப்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருப்பது குறித்து அன்புமணியிடம் தொலைபேசி மூலம் கருத்து கேட்டோம். ‘‘ஐயாவே சொன்ன பிறகு, இந்த விஷயத்தில் நான் என்ன சொல்ல இருக்கிறது. ஐயாவின் கருத்துதான் என் கருத்து’’ என்று தன் உதவியாளர் மூலமாக தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x