

தமிழ்நாடு பால் முகவர் சங்க தலைவர் எஸ்.ஏ.பொன்னுச்சாமி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பால் முகவர்கள் நள்ளிரவில் பணியாற்றுவதால் அவர்களுக்கு தமிழக அரசு அடையாள அட்டை வழங்க வேண்டும். ஒன்றரை லட்சம் பால் முகவர்களுக்கான தனி நலவாரியம் அமைக்க வேண்டும். பால் முகவர்களுக்கு இலவச மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும்.
பாலில் கலப்படம் செய்யும் பால் நிறுவனங்களை கண்டறிய தமிழக அரசு நிபுணர் குழுவை அமைத்து, கலப்படத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
தனியார் பால் நிறுவனங்கள் பால் விலையை தன்னிச்சையாக உயர்த்துவதை தடுக்க பொதுமக்கள், பால் முகவர்கள், அரசு அதிகாரிகள், தனியார் பால் நிறுவன அதிகாரிகள் அடங்கிய நால்வர் குழுவை அமைக்க வேண்டும். பால் வணிகத்தில் நேரடி அன்னிய முதலீடு செய்யும் முயற்சியை அரசு தடுத்து நிறுத்த தமிழகத்தில் உள்ள அனைத்து பால் நிறுவனங்களையும் ஒருங்கி ணைத்து போராட முடிவு செய்யப் பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, இந்தியாவில் உள்ள அனைத்து பால் நிறுவனங்களையும் ஒருங் கிணைத்து மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தவும், நடந்து முடிந்த மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.