Published : 03 Jun 2023 09:00 AM
Last Updated : 03 Jun 2023 09:00 AM

இளைஞர்களுக்கு தீவிரவாத பயிற்சி விவகாரம் - 5 பேரை காவலில் எடுத்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

கோப்புப்படம்

சென்னை: ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு நிதியுதவி செய்ததாகவும், ஆட்களை அனுப்பியதாகவும் கூறி, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கேரளா, கர்நாடகா, தமிழகம், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளில் கடந்த ஆண்டு சோதனை நடத்தினர்.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உட்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர். பாப்புலர் ஃப்ரன்ட்ஆஃப் இந்தியா அமைப்பு மற்றும் அதன்துணை அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் சென்னை, மதுரை, தேனிஉள்ளிட்ட 6 இடங்களில் அண்மையில் சோதனை நடத்தப்பட்டு, ஆவணங்கள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

டெல்லியிலிருந்து வந்த என்ஐஏ அதிகாரிகள், சென்னையைச் சேர்ந்த அப்துல் ரசாக் (47), மதுரை முகமது யூசுப் (35), முகமது அப்பாஸ் (45), திண்டுக்கல் கைசர்(45), தேனி சாதிக் அலி (39) ஆகியோரைக் கைது செய்தனர். இவர்கள், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவுக்கு ஆதரவான செயல்களில் ஈடுபட்டதும், ஆயுதங்களைக் கையாள்வது குறித்து இளை ஞர்களுக்குப் பயிற்சி அளித்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, இந்த 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ அதிகாரிகள் மனுதாக்கல் செய்தனர். அவர்களை 5 நாட்கள் காவலில்எடுத்து விசாரிக்க நீதிபதி இளவழகன் அனுமதி அளித்தார். மேலும், வரும் 6-ம்தேதி மீண்டும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டார்.

இதையடுத்து, 5 பேரையும் தனி இடத்தில் வைத்து, என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சத்தியமங்கலம் வனப் பகுதியில் ஆயுதப் பயிற்சி அளித்ததாகக் கூறப்படும் இடங்களுக்கு அவர்களை அழைத்துச் சென்று, அங்கு விசாரணை நடத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x