Published : 27 Oct 2017 10:21 AM
Last Updated : 27 Oct 2017 10:21 AM

பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் சாலையைப் பராமரிக்காமல்சுங்கக் கட்டணம் வசூலிப்பதாக புகார்

சாலையைப் பராமரிக்காமல் சுங்கக் கட்டணம் வசூல் செய்யும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குண்டும் குழியுமான சாலைகள்

மக்கள் சுற்றுச்சூழல் மற்றும் விழிப்புணர்வு அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.யுவராஜ், பூந்தமல்லி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: பூந்தமல்லி நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து வலதுபுறம் ஆவடி செல்லும் சாலைக்கு முன்பாக சென்னீர்குப்பம் மேம்பாலத்தின் இருபுறமும் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அனைத்து பயணிகளும் தினமும் உயிரைப் பணயம் வைத்துதான் இந்தச் சாலையை கடக்கின்றனர்.

ரூ.30 லட்சத்துக்கும் மேல் வசூல்

இந்தச் சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் சுங்கவரி செலுத்தித் தான் பயணிக்கின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடியில் தினமும் ரூ.30 லட்சத்துக்கும் மேல் வசூல் செய்யப்படுகிறது. இன்றுவரை நான்கு வழிப்பாதையாக உள்ள வானகரம் - ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி நிறுவனத்தினர் மக்களை ஏமாற்றி ஆறு வழிப்பாதைக்கான கட்டணத்தை வசூலிக்கின்றனர். இது மிகப்பெரிய மோசடி யாகும்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

சுங்கச்சாவடியை நடத்துபவர்கள் பல ஆண்டுகளாக சீர்கெட்ட சாலைகளைப் பராமரிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மனித உயிர்கள் பலியாகக் காரணமாக உள்ளனர்.

எனவே, என்எச்4 திட்ட இயக்குநர் நாராயணன், ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி கிளோபல் நிறுவன திட்ட இயக்குநர் சகாங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட் டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x