

சென்னை: இளையராஜாவுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மநீம தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.
பாஜக தலைவர் அண்ணாமலை: ஏறத்தாழ ஐம்பதாண்டுக் காலமாக, இசையை ஆளும் முடிசூடா மன்னரும், பாராளுமன்ற உறுப்பினருமான இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக பாஜக சார்பாக இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இசைஞானி இளையராஜா, இன்று பல கோடி மக்களின் உணர்வுகளை ஆற்றுப்படுத்தும் இசை மருத்துவராக, நம் தேசத்தின் அடையாளங்களில் ஒருவராக விளங்குவதில் நம் அனைவருக்கும் பெருமையே.
இன்று காலை, இசைஞானி இளையராஜாவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறி, அவரது ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இசைஞானி இளையராஜா, நீண்ட ஆயுளுடன் இன்னும் பல ஆண்டுகள் இசையால் இந்த உலகை ஆள எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
மநீம தலைவர் கமல்ஹாசன்: திரையிசை சகாப்தம் ஒன்று எட்டு தசாப்தங்களை கடந்து நிலைத்து மகிழ்வித்துக் கொண்டிருக்கிறது. இ, ளை, ய, ரா, ஜா ஆகிய ஐந்துதான் இந்தியத் திரையிசையின் அபூர்வ ஸ்வரங்கள் என்று சொல்லத்தக்க அளவில் தன் சிம்மாசனத்தை அழுத்தமாக அமைத்துக்கொண்டவர் என் அன்புக்கும் ஆச்சரியத்துக்கும் மிக உரிய உயரிய அண்ணன் இளையராஜா. இன்று பிறந்த நாள் காணும் இசையுலக ஏகச் சக்ராதிபதியை வாழ்த்துகிறேன்.