Published : 02 Jun 2023 06:51 AM
Last Updated : 02 Jun 2023 06:51 AM

பிரதமர் மோடி படம் இருப்பதால் 250 கால்நடை ஆம்புலன்ஸ்கள் தமிழகத்தில் முடக்கம் - அண்ணாமலை கண்டனம்

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் படம் இருப்பதால் ரூ.39 கோடியில் வாங்கப்பட்ட 250 கால்நடை ஆம்புலன்ஸ் வாகனங்களைப் பயன்படுத்தாமல் தமிழக அரசு முடக்கி வைத்திருப்பதாக அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர், தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கால்நடைகள் நோய் பாதிப்பாலும், எலும்பு முறிவு உள்ளிட்டபாதிப்புகளாலும், கன்று ஈனுவதிலும் உள்ள பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது, அவற்றுக் கான உடனடி மருத்துவ முக்கியத்துவத்தை உணர்ந்த மத்திய அரசு, ஒவ்வொரு மாநில அரசுடனும் இணைந்து, 1962 என்ற அவசர கால இலவச ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகம் செய்திருந்தது.

ரூ.39 கோடி மதிப்பிலானவை: இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் இருளம்பாளையம் அருகே சுமார் ரூ.39 கோடி மதிப்புள்ள 250 புத்தம் புதிய கால்நடை ஆம்புலன்ஸ் வாகனங்கள், 6 மாதங்களாக பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக வந்திருக்கும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

முழுக்க முழுக்க மத்திய அரசு நிதியில் வாங்கப்பட்டுள்ள இந்த ஆம்புலன்ஸ் வாகனங்களை பிரதமர் மோடி படம் உள்ளது என்ற காரணத்துக்காக, திமுகஅரசு முடக்கி வைத்திருப்பதுவன்மையான கண்டனத்துக்குரியது.

வாழ்வாதாரத்தில் விளையாடுகிறது: ஆம்புலன்ஸ் வாகனங்களை பயன்படுத்தாமல் முடக்கி வைத்திருப்பதன் மூலம் கால்நடை களுக்கான அவசர மருத்துவ உதவி கிடைக்காமல், விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறது திமுக அரசு.

எனவே, உடனடியாக அனைத்து கால்நடை ஆம்புலன்ஸ் வாகனங்களையும் மாநிலம் முழுவதும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு ட்விட்டர் பதிவில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x