சர்வதேச முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு: ஆயத்த பணிகளை முதல்வர் தாமி ஆய்வு

உத்தராகண்டில், நவம்பர், டிசம்பரில் நடைபெறவுள்ள சர்வதேச முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி பங்கேற்றார்.
உத்தராகண்டில், நவம்பர், டிசம்பரில் நடைபெறவுள்ள சர்வதேச முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி பங்கேற்றார்.
Updated on
1 min read

சென்னை: உத்தராகண்டில் இந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள சர்வதேச முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆய்வு மேற்கொண்டார்.

மாநில தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டுக்கான பணிகளைக் குறித்த காலத்தில் முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் தாமி உத்தரவிட்டார். இந்த உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்க வேண்டும் என்று அப்போது முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் அவர் கூறும்போது, ``உத்தராகண்ட் மாநிலத்தில் தொழில் முதலீடுகளை அதிகரிக்க இது சிறந்த வாய்ப்பு. இங்கு திறமையான மனித ஆற்றல், தொழிற்சாலைகளை அமைக்கத் தேவையான சுற்றுச்சூழல் உள்ளது. முதலீட்டாளர்களைக் கவரும் வகையில் புதிய, திடமான தொழிற்துறை கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன.

மாநிலத்தில் சாலை, ரயில், விமான போக்குவரத்து வசதிகள் விரைவாக விரிவாக்கம் செய்யப்பட்டதன் மூலம் தொழில் முதலீட்டாளர்களை தேவ பூமியான உத்தராகண்ட் ஈர்த்துள்ளது'' என்றார். l

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in