பெரம்பலூர் அருகே சூறைக்காற்றுடன் மழை: 100 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் சேதம்

பெரம்பலூர் மாவட்டம் மலையாளப்பட்டியில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையில் வேருடன் வயலில் சாய்ந்துள்ள மக்காச்சோள பயிர்கள்.

பெரம்பலூர் மாவட்டம் மலையாளப்பட்டியில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையில் வேருடன் வயலில் சாய்ந்துள்ள மக்காச்சோள பயிர்கள்.

Updated on
1 min read

பெரம்பலூர்: கடும் சூறைக்​காற்​றுடன் மழை பெய்​த​தில் பெரம்​பலூர் மாவட்​டம் வேப்​பந்​தட்டை வட்​டத்​துக்கு உட்​பட்ட மலை​யாளப்​பட்டி கிராமத்​தில் 100 ஏக்​கர் மக்​காச் ​சோளம் மற்​றும் 20 ஏக்​கர் வாழை மரங்​கள் வயலில் சாய்ந்து சேதமடைந்​துள்​ளன.

பெரம்பலூர் மாவட்​டத்​தில் நேற்று முன்​தினம் சூறைக்​காற்​றுடன் பரவலாக மழை பெய்​தது. இதனால், பல நாட்​களாக கடுமை​யாக நிலவி வந்த வெப்​பம் தணிந்து குளிர்ச்சி நில​விய​தால் மக்​கள் மகிழ்ச்சி அடைந்​தனர். அதேவேளை​யில், சில இடங்​களில் வேளாண் பயிர்​கள் சேதமடைந்​த​தால் விவ​சா​யிகள் கவலை அடைந்​துள்​ளனர்.

இந்​நிலை​யில், வேப்​பந்​தட்டை வட்​டம் மலை​யாளப்​பட்டி கிராமத்​தில் சூறைக்​காற்​றுடன் பெய்த மழை​யால் 100 ஏக்​கர் மக்​காச்​சோள பயிர்​கள், 20 ஏக்​கர் வாழை மரங்​கள் வயலில் சாய்ந்து​விட்​டன. இதனால், பல லட்ச ரூபாய் இழப்​பீடு ஏற்​பட்​டு உள்​ள​தாக விவ​சா​யிகள் கவலை தெரிவிக்​கின்​றனர்.

இதுகுறித்து தமிழக விவ​சா​யிகள் சங்க மாவட்​டத் தலை​வர் வி.நீல​கண்​டன் கூறியது: பெரம்​பலூர் மாவட்​டத்​தில் பரவலாக மக்​காச்​சோளம் சாகுபடி செய்​யப்​பட்​டு, அவை அறு​வடை காலத்தை நெருங்​கி​ இருந்​தன.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் சூறைக்​காற்​றுடன் பெய்த பலத்த மழை​யில் 100 ஏக்​கர் மக்​காச்​சோள பயிர்​கள் வேருடன் வயலில் சாய்ந்​து​விட்​டன. இது​வரை ஏக்​கருக்கு ரூ.43 ஆயிரம் வரை செல​வழித்​துள்ள நிலை​யில் கடும் சேதம் ஏற்​பட்​டுள்​ளது.

இதே​போல, 20 ஏக்​கர் வாழை மரங்​களும் சாய்ந்​து​விட்​டன. பயிர்​கள் பாதிப்பு குறித்து அரசு கணக்​கெடுத்​து, பாதிக்​கப்​பட்ட விவ​சா​யிகளுக்கு உரிய இழப்​பீடு வழங்க வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்​.

<div class="paragraphs"><p>பெரம்பலூர் மாவட்டம் மலையாளப்பட்டியில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையில் வேருடன் வயலில் சாய்ந்துள்ள மக்காச்சோள பயிர்கள்.</p></div>
பரமக்குடியில் பேருந்தில் மறதியாக மாணவர் விட்டுச் சென்ற நீட் தேர்வு ஹால் டிக்கெட் உரிய நேரத்தில் ஒப்படைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in