இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 10 பேர் கைது

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம்  மீனவர்கள்.

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள்.

Updated on
2 min read

ராமேசுவரம்: நெடுந்​தீவு அருகே மீன் பிடித்​துக் கொண்​டிருந்த தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்​படை​யினர் கைது செய்​தனர். இலங்​கைக்கு அருகே தென்​கிழக்கு வங்​கக் கடலில் ஏற்​பட்​டிருந்த ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்​டலம் காரண​மாக கடந்த ஒரு வார​மாக ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்​குச் செல்ல அனு​ம​திச் சீட்டு வழங்​கப்​பட​வில்​லை. இதனால் மீனவர்கள் கடலுக்​குச் செல்​ல​வில்​லை.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் வானிலை இயல்பு நிலைக்​குத் திரும்​பியதைத் தொடர்ந்து நேற்று ராமேசுவரம் விசைப்​படகு மீனவர்கள் 2 ஆயிரம் பேர் 400-க்​கும் மேற்​பட்ட படகு​களில் கடலுக்​குச் சென்​றனர்.

நெடுந்​தீவு அருகே மீன் பிடித்​துக் கொண்​டிருந்த தென்​னரசு என்​பவருக்​குச் சொந்​த​மான விசைப்​படகை சுற்​றிவளைத்த இலங்கை கடற்​படை​யினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்​த​தாகக் கூறி படகில் இருந்த மீனவர்கள் ஜார்​ஜ், சுதன், கனக​ராஜ் சுமித், பரலோக​ராஜ், கோபி, ஆரோக்​கிய ரூபட், பிரேம்​கு​மார், தினேஷ், ராஜேஸ் ஆகியோரைக் கைது செய்​தனர்.

பின்​னர் அவர்​களை காரைநகர் கடற்​படை முகா​முக்​குக் கொண்டு சென்​று, இலங்கை மீன்​வளத் துறை​யினரிடம் ஒப்​படைத்​தனர். தொடர்ந்​து, கைது செய்​யப்​பட்ட மீனவர்கள் மீது குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​து, ஊர்​காவல்​துறை நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தினர்.

அவர்​களை காவலில் அடைக்க நீதிபதி உத்​தர​விட்​டார். இதையடுத்​து, 10 மீனவர்​களும் யாழ்ப்​பாணம் சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர். இந்த ஆண்டு ஜனவரி மாதம் மட்​டும் 3 விசைப் படகு​களை இலங்கை கடற்​படை​யினர் சிறைபிடித்​து, தமிழக மற்​றும் புதுச்​சேரி மாநில மீனவர்கள் 29 பேரைக் கைது செய்​துள்​ளது குறிப்பிடத்தக்கது.

ஜி.கே.​வாசன் வலி​யுறுத்​தல்: தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழக மீனவர்​களை இலங்கை கடற்​படை​யினர் கைது செய்​வதும், விசைப்​படகு​களை பறி​முதல் செய்​வதும் நீடிக்​கிறது. இதனால் தமிழக மீனவர்கள் வாழ்​வா​தா​ரத்தை இழந்து தவிக்​கின்​றனர்.

எனவே, மத்​திய அரசு இலங்கை அரசுடன் உடனடி​யாக பேசி, கைது செய்​யப்​பட்​டுள்ள அனைத்து மீனவர்கள் மற்​றும் அவர்​களது படகு​களை விடுவிக்க வேண்​டும். இனி​யும் கைது நடவடிக்​கைகள் தொட​ராத அளவுக்​கு, வெளி​யுறவுத் துறை மூலம் தக்க நடவடிக்கை மேற்​கொள்ள வேண்​டும். இவ்​வாறு ஜி.கே.​வாசன் தெரி​வித்​துள்​ளார்.

முதல்வர் ஸ்டாலின் கடிதம்: மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் எஸ்​.எஸ்​.ஜெய்​சங்​கருக்​கு, முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் எழு​தி​யுள்ள கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: இலங்கை கடற்​படை​யின​ரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்​யப்​படு​வதும், அவர்​களின் மீன்​பிடிப் படகு​கள் சிறைபிடிக்​கப்​படு​வதும் மிகுந்த கவலை அளிக்​கிறது. மொத்​தம் 83 மீனவர்கள் இலங்கை சிறை​களில் உள்​ளனர். 252 மீன்​பிடிப் படகு​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன.

சிறை பிடிக்​கப்​பட்​டுள்ள மீனவர்​களின் குடும்​பத்​தினர் நலன் கரு​தி​யும், பொங்​கல் பண்​டிகையை குடும்​பத்​தினருடன் கொண்​டாட ஏது​வாக​வும் கைது செய்​யப்​பட்​டுள்ள அனைத்து மீனவர்​களை​யும், அவர்​களது மீன்​பிடிப் படகு​களை​யும் இலங்கை அரசு உடனடி​யாக விடுவிக்​க​வும், தொடர்ந்து இது​போன்ற கைது நடவடிக்​கைகளைத் தடுக்​க​வும் மத்​திய அரசு உரிய தூதரக நடவடிக்​கைகளை விரைந்து மேற்​கொள்ள வேண்​டும். இவ்​வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.

<div class="paragraphs"><p>இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம்  மீனவர்கள்.</p></div>
கனிமவள கொள்ளையை தடுக்காத திமுக அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in