

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக, சென்னையில் இருந்து திருநெல்வேலி உட்பட 10 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன் விவரம்: நாகர்கோவிலில் இருந்து ஜன.11, 18 ஆகிய தேதிகளில் இரவு 11 மணிக்கு அதி விரைவு சிறப்பு ரயில் (06012) புறப்பட்டு, மறுநாள் காலை 10.15 மணிக்கு தாம்ப ரத்தை வந்தடையும். மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து ஜன.12, 19 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.30 மணிக்கு சிறப்பு ரயில் (06011) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு கன்னியாகுமரியை அடையும்.
கன்னியாகுமரியில் இருந்து ஜன.13, 20 ஆகிய தேதிகளில் இரவு 8.30 மணிக்கு சிறப்பு ரயில் (06054) புறப்பட்டு, மறுநாள் காலை 10.15 மணிக்கு தாம்பரத்தை அடை யும். மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து ஜன.14, 21 ஆகிய தேதிகளில் நண்பகல் 12.30 மணிக்கு சிறப்பு ரயில் (06053) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு நாகர்கோவிலை அடையும்.
திருநெல்வேலியில் இருந்து ஜன.10, 17 ஆகிய தேதிகளில் அதிகாலை 3.45 மணிக்கு அதி விரைவு சிறப்பு ரயில் (06158) புறப்பட்டு, அதேநாள் மதியம் 1.15 மணிக்கு செங்கல்பட்டை அடையும். மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து ஜன.10, 17 ஆகிய தேதிகளில் மாலை 5 மணிக்கு சிறப்பு ரயில் (06157) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3 மணிக்கு திருநெல்வேலியை அடையும்.
சென்னை - கோவை: கோயம்புத்தூரில் இருந்து ஜன.11, 18 ஆகிய தேதிகளில் இரவு 11.30 மணிக்கு சிறப்பு ரயில் (06034) புறப்பட்டு, மறுநாள் காலை 9.50 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து ஜன.12, 19 ஆகிய தேதிகளில் இரவு 11.25 மணிக்கு சிறப்பு ரயில் (06033) புறப்பட்டு, மறுநாள் காலை 9 மணிக்கு கோயம்புத்தூரை சென்றடையும்.
திருநெல்வேலியில் இருந்து ஜன.8-ம் தேதி இரவு 11.30 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (06070) புறப்பட்டு, மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து ஜன.9-ம் தேதி நண்பகல் 12.30 மணிக்கு சிறப்பு ரயில் (06069) புறப்பட்டு, அதேநாள் இரவு 11.30 மணிக்கு திருநெல்வேலியை வந்தடையும்.
இதுதவிர, மங்களூர்- சென்னை சென்ட்ரல் இடையேயும், ஈரோடு -செங்கோட்டை இடையேயும், போத்தனூர் - சென்னை சென்ட்ரல் இடையேயும், ராமேஸ்வரம் - தாம்பரம் இடையேயும், திருநெல்வேலி-செங்கல்பட்டு இடையேயும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (ஜன.4) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.