Published : 27 Aug 2019 10:39 AM
Last Updated : 27 Aug 2019 10:39 AM

அந்த நாள் 47: இந்திய விஞ்ஞானிகள் முதல் அயல் அரசர்களின் ஆட்சி வரை

ஆதி வள்ளியப்பன்

பொது ஆண்டுத் தொடக்கத்தில் சாஞ்சி ஸ்தூபி நிறுவப்பட்டது முதல் 14-ம் நூற்றாண்டில் தைமூர் படையெடுப்புவரை இந்தியாவில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் குறித்த காலவரிசை:
பொது ஆண்டு (பொ.ஆ.-கி.பி.)

50: முதல் பௌத்த ஸ்தூபியான சாஞ்சி ஸ்தூபி கட்டப்பட்டது
50: யேசுவின் நேரடி சீடர்களில் ஒருவரான புனிதத் தாமஸ் இந்தியாவுக்கு வந்தார்
78: குஷான வம்சத்தின் கனிஷ்கர் அரசர் ஆனார்
300 - 500: குப்தர்களின் காலம்
375 - 415: இரண்டாம் சந்திரகுப்தர் என்ற விக்கிரமாதித்யனின் ஆட்சி
390: குஜராத்வரை ஆட்சிப் பகுதியை இரண்டாம் சந்திரகுப்தர் விரிவுபடுத்தினார்
399-414: சீன பௌத்தத் துறவியும் பயணியுமான ஃபா ஹியானின் வருகை
450: நாளந்தாவில் முதலாம் குமாரகுப்தர் பௌத்தப் பல்கலைக்கழகத்தை நிறுவினார்.
455: ஸ்கந்தகுப்தருக்கு எதிராக ஹுனர்களின் படையெடுப்பு
476-550: வானியல் ஆய்வாளர் ஆர்யபட்டரின் காலம்
499: ‘ஆர்யபட்டதியம்’ என்ற கணித, வானியல் தொகுப்பு நூலை ஆர்யபட்டர் வெளியிட்டார்
528: தொடர் அந்நிய படையெடுப்பால் குப்தர்களின் ஆட்சி வீழ்ந்தது
505- 587: வானியல் ஆய்வாளர் வராகமிஹிரரின் காலம்
543 - 566: மத்திய இந்தியாவில் பாதாமியைத் தலைநகராகக் கொண்டு புலிகேசியின்கீழ் சாளுக்கியர்கள் எழுச்சி பெற்றனர்
606 - 647: கன்னௌஜை (உத்தரபிரதேசம்) தலைநகராகக் கொண்டு வட இந்தியா-நேபாளப் பகுதியை பௌத்த அரசரான ஹர்ஷவர்த்தனர் ஆட்சி புரிந்தார்
630 - 643: சீன பௌத்தத் துறவியும் பயணியுமான சுவான் சாங் (யுவான் சுவாங்) வருகை
753: சாளுக்கியர்களை ராஷ்டிரகூடர்கள் வீழ்த்தினார்கள்
800: காலடியில் சங்கராச்சாரியார் பிறந்தார்
998 - 1030: வட இந்தியாவில் கஜினி முகமது படையெடுப்பு
1017-30: பாரசீகக் கணிதவியலாளர் அல் பிருனியின் இந்திய வருகை
1190: சாளுக்கியர்களின் முந்தைய ஆட்சிப் பகுதி ஹொய்சாளர்கள், யாதவர்கள், காகதீயர்கள் ஆகியோரால் பிரிக்கப்பட்டது
1192: இரண்டாம் தரெய்ன் (ஹரியாணா) போரில் பிரித்விராஜ் சௌஹானை வீழ்த்தி டெல்லியைக் கைப்பற்றினார் ஆப்கனை சேர்ந்த முகமது கோரி. பின்னர் டெல்லி சுல்தான்களின் ஆட்சி நிறுவப்பட இது காரணமாக அமைந்தது.
முந்தைய ஆண்டு நடைபெற்ற முதலாம் தரெய்ன் போரில் பிரித்விராஜ் வென்றிருந்தார்.
1194 கன்னௌஜின் கார்வார் மன்னர் ஜெய்சந்திராவை முகமது கோரி வென்றார்
1206 ஜீலம் நதிக்கரையில் அமைக்கப்பட்டிருந்த முகாமைத் தாக்கி முகமது கோரியை கக்கார் இனக்குழுவினர் கொன்றனர்
1206: டெல்லி சுல்தான்களின் ஆட்சியை குதுப் உத்தின் அய்பக் நிறுவினார்
1221: பஞ்சாப்பின் சில பகுதிகள் மீது செங்கிஸ் கான் படையெடுத்தார்
1236 - 1240: டெல்லி சுல்தான்களில் ரஸியா சுல்தானாவின் ஆட்சி (இந்தியாவின் முதல் அரசி)
1288: இத்தாலிய வணிகரும் சாகசப் பயணியுமான மார்கோ போலோவின் இந்திய வருகை
1290: 1296: ஜலால் உத்தின் கில்ஜி மூலம் டெல்லியில் கில்ஜி சுல்தான்களின் ஆட்சி நிறுவப்பட்டது
1296 - 1316 அலா உத்தின் கில்ஜியின் ஆட்சி
1320 - 1388: கியாஸ் உத்தின் துக்ளக் மூலம் டெல்லியில் துக்ளக் வம்சத்தின் ஆட்சி நிறுவப்பட்டது
1325 - 1351: டெல்லியின் புதிய சுல்தான் முகமது பின் துக்ளக்
1327: முகமது பின் துக்ளக் ஆட்சியில் தலைநகரம் டெல்லியிலிருந்து தௌலதாபாத்துக்கு மாற்றப்பட்டது
1332: மொராக்கோவின் இஸ்லாமியப் பயணி இப்ன் பதூதா இந்திய வருகை
1336 - 1565: ஹரிஹரர் 1, அவரது சகோதரர் புக்க ராயர் ஆகியோர் இணைந்து விஜயநகரப் பேரரசை தென்னிந்தியாவில் நிறுவினார்கள்
1347: முகமது பின் துக்ளக்குக்கு எதிராக பாமினி ஷா கிளர்ச்சி நடத்தி, தக்காணத்தில் பாமினி சுல்தான்களின் ஆட்சி நிறுவப்பட்டது
1398: மங்கோலியாவைச் சேர்ந்த தைமூரின் இந்தியப் படையெடுப்பு
1440 - 1515: வாராணசியைச் சேர்ந்த புனித கபீர் வாழ்ந்த காலம்

யாருக்கு உதவும்?
போட்டித் தேர்வுகளுக்கான வரலாற்றுப் பகுதி, பள்ளி வரலாற்றுப் பாடம்

கட்டுரையாளர்
தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x