செய்திப்பிரிவு

Published : 27 Aug 2019 10:35 am

Updated : : 27 Aug 2019 10:35 am

 

வேலை வேண்டுமா? - இந்தியப் பொதுக்காப்பீட்டுக் கழகப் பணி

general-insurance-corporation-of-india

ஜெ.கு.லிஸ்பன் குமார்

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான இந்தியப் பொதுக் காப்பீட்டுக் கழகத்தில் (General Insurance Corporation of India-GIC) உதவி மேலாளர் பதவியில் 25 காலியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
இக்காலியிடங்கள் நிதி, கணக்கு, தகவல் தொழில்நுட்பம் (சாப்ட்வேர்), சட்டம், ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங், சிவில், ஏரோநாட்டிக்கல், மரைன் இன்ஜினீயரிங், கம்பெனி செக்ரட்டரி, இந்தி மொழி ஆகிய பிரிவுகளில் இடம்பெற்றுள்ளன. பி.காம்., பி.இ., பி.டெக்., பி.எல்., எம்.ஏ. (இந்தி) பட்டதாரிகளும், கம்பெனி செக்ரட்டரிஷிப் படித்தவர்களும் தங்களுக்கான பிரிவுகளில் உள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தகுதி

வயது 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிகளின்படி எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானோர் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவர். எழுத்துத் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும். அதில் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட பாடம், ரீசனிங், ஆங்கிலம், பொது அறிவு, கணிதத் திறன், அடிப்படைக் கணினி அறிவு ஆகிய பகுதிகளில் இருந்து அப்ஜெக்டிவ் முறையில் வினாக்கள் இடம்பெறும். அதோடு கூடுதலாக ஆங்கிலத்தில் விரிவாக விடையளிக்கும் தேர்வும் (கட்டுரை எழுதுதல், சுருக்கி வரைதல்) உண்டு.

தொடக்க ஊதியம் ரூ.59 ஆயிரம்


குறிப்பிட்ட கல்வித்தகுதியும், வயது வரம்பும் உடைய பட்டதாரிகள் இந்திய பொதுக் காப்பீட்டுக் கழகத்தின் இணையதளத்தைப் (www.gicofindia.in) பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டைத் தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன்பு ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். உதவி மேலாளர் பதவிக்கு ஆரம்ப நிலையில் ரூ.59 ஆயிரத்துக்கு மேல் ஊதியம் கிடைக்கும்.

அதோடு பல்வேறு சலுகைகளும் அலவன்சுகளும் உண்டு. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக் கட்டணம், தேர்வு மையம், இட ஒதுக்கீடு வாரியான காலியிடங்கள், பணிநியமன விதிமுறைகள் போன்ற விவரங்களை இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 11 செப்டம்பர் 2019
ஆன்லைன்தேர்வு (உத்தேசமாக): 5 அக்டோபர் 2019

வேலை வேண்டுமாஇந்தியப் பொதுக்காப்பீட்டுக் கழகப் பணிபொதுக்காப்பீட்டுக் கழகம்மத்திய அரசுபொதுத் துறைGeneral Insurance Corporation of IndiaGICஊதியம்
Popular Articles

You May Like

More From This Category

More From this Author