Published : 20 Aug 2019 11:29 AM
Last Updated : 20 Aug 2019 11:29 AM

அந்த நாள் 46: ஒரு பின்கதைச் சுருக்கம்

ஆதி வள்ளியப்பன்

அன்புள்ள செழியன்,

“ஆங்கிலேயர் வருகைக்குப் பிந்தைய தமிழக, இந்திய வரலாறு ஒரு பெருங்கதை. அதைப் பிறகொரு முறை தனியாகப் பார்ப்போம். சிந்து சமவெளி நாகரிகத்திலிருந்து ஆங்கிலேயர் வருகை வரையிலான தமிழக, இந்திய வரலாற்றின் முக்கிய அம்சங்களை இந்தத் தொடரில் பார்த்திருக்கிறோம். வரலாறு என்றால் வெறும் ஆண்டுகள், பெயர்கள் என்று நினைப்பது தவறு. வரலாறு மிகவும் சுவாரசியமானது என்பதை இந்தத் தொடரில் தெரிந்துகொண்டிருப்போம்.

அதேநேரம் முக்கிய வரலாற்றுச் சம்பவங்கள் எந்தக் காலத்தில் நடந்தன என்பதைத் தெரிந்துகொள்வதும் முக்கியம்தான். போட்டித் தேர்வுகளுக்கு மட்டுமில்லாமல், வரலாற்றைப் புரிந்து கொள்ளவும் இன்றைய சூழ்நிலையைப் புரிந்து கொள்ளவும்கூட இந்த வரலாற்றுச் சம்பவங் களும் ஆண்டுகளும் உதவக்கூடும். இதுவரை பார்த்த வரலாற்றுச் சம்பவங்களின் முக்கிய காலவரிசையை அடுத்து வரும் சில வாரங்களுக்குப் பார்ப்போம்.”
அன்புடன், குழலி

பொது ஆண்டுக்கு முன் (பொ.ஆ.மு. அல்லது கி.மு.)

3000 - 1500

சிந்து சமவெளி நாகரிக காலம்

2500

மொகஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய சிந்து சமவெளி நாகரிகத்தின் பெருநகரங்கள் செழிப்பாக வளரத் தொடங்கின

2000

சிந்து சமவெளி நாகரிகத்தின் வீழ்ச்சி தொடக்கம்

1500 – 1200

வேத காலம், ஐரோப்பாவிலிருந்து ஆரியர்களின் வருகை. இந்திய-ஆரிய பண்பாட்டு வளர்ச்சி.

1100

இரும்புக் கருவிகளை இந்திய ஆரியர்கள் பயன்படுத்தத் தொடங்கி னார்கள். இது இரும்பு காலம் எனப்பட்டது.

1000

பண்டைய சம்ஸ்கிருதப் புனித நூலும், இந்திய - ஐரோப்பிய மொழிகளில் அமைந்த பழைய நூலுமான ‘ரிக் வேதம்’ இயற்றப்பட்டது

750

வட இந்தியாவில் மகாஜனபதம் எனப்பட்ட 16 பெரிய மாகாணங்களை இந்திய ஆரியர்கள் ஆண்டார்கள்.

700

சாதிப் பிரிவினை தொடங்கியது

600

இந்து மதத்துக்கு அடிப்படையாகக் கூறப்படும் உபநிடதங்கள் எனப்பட்ட சம்ஸ்கிருதப் புனித நூல்கள் இயற்றப்பட்டன

560-467

இளவரசராக இருந்து சமணத் தீர்த்தங்கரராக மாறிய வர்த்தமான மகாவீரரின் காலம்

556 – 468

இளவரசராக இருந்து பௌத்த மதத்தை நிறுவிய சித்தார்த்த கௌதமர் எனப்பட்ட புத்தரின் காலம்

543

பௌத்தக் கொள்கை களைப் பின்பற்றிய பிம்பி சாரர் மகத ராஜ்ஜியத்தைக் கைப்பற்றி (இன்றைய பிஹார்) ஆட்சி புரியத் தொடங்கினார்

527

புத்தர் ஞானம் பெற்று பௌத்த மதத்தை நிறுவினார்

500

மகாவீரர் சமண மதத்தை தோற்றுவித்து, வட இந்தியாவில் பரவலாக்கினார்

493

பிம்பிசாரர் இறந்தார், அஜாதசத்ரு மகுடம் சூடினார்

461

மகத எல்லையை விரிவுபடுத்திய அஜாதசத்ரு, சிறிது காலத்தில் காலமானார்

362 – 321

மகத தேசத்தை நந்த வம்சம் ஆண்டது

327

மாசிடோனியாவின் பேரரசர் அலெக்சாண்டர் பண்டைய இந்தியப் பகுதிகளுக்குப் போரிட்டு வந்தார். கிழக்கு பஞ்சாப்பை ஆண்டு வந்த போரஸ் என்ற புருஷோத்தமனிடம் அவர் வீழ்ந்தார்.

321

மகத ஆட்சிப் பகுதியின் மன்னராக சந்திரகுப்த மௌரியர் ஆனார். பாடலிபுத்திரத்தை (பாட்னா) தலைநகராகக் கொண்டு மௌரிய வம்சத்தை அவர் நிறுவினார்.

315 – 305

இந்தியாவுக்கு மாசிடோனியத் தூதர் மெகஸ்தனிஸ் வருகை

300

புகழ்பெற்ற சம்ஸ்கிருதப் புராண நூலான ‘ராமாயண’த்தை வால்மீகி இயற்றினார்.

300

தென்னிந்தியாவி லேயே முதன்முறை யாக முற்காலச் சோழப் பேரரசு நிறுவப்பட்டது. தலைநகரங்கள்: உறையூர், காவிரிப்பட்டினம்

290

சந்திரகுப்த மௌரியரின் மகன் பிந்துசாரர் மௌரிய ஆட்சியை தக்காணம்வரை விரிவுபடுத்தினார்.

268 – 231

மௌரிய வம்சத்தைச் சேர்ந்த பேரரசர் அசோகரின் ஆட்சிக் காலம்

265-262

கலிங்கப் (இன்றைய ஒடிசா) போருக்குப் பிறகு, பேரரசர் அசோகர் பௌத்த மதத்தைத் தழுவினார்

250

பாடலிபுத்திரத்தில் மூன்றாவது பௌத்த மாநாடு

220

இந்தியாவின் பெரும் பகுதியை மௌரிய ஆட்சி கைப்பற்றியது

200

பிரபல சம்ஸ்கிருத நூலான ‘மகாபாரதம்’ இயற்றப்பட்டது

185

மௌரியர்களின் ஆட்சி வீழ்ந்து, சுங்கர்களின் ஆட்சி தொடக்கம்

180-165

வடமேற்கு இந்தியாவில் இந்திய-கிரேக்க அரசர்களின் ஆட்சி

100

‘பகவத் கீதை’ இயற்றப்பட்டது

78

சுங்கர்களின் ஆட்சி வீழ்ச்சி

50

தக்காணத்தில் சாதவாகனர்களின் எழுச்சி

யாருக்கு உதவும்?

போட்டித் தேர்வுகளுக்கான வரலாற்றுப் பகுதி, பள்ளி வரலாற்றுப் பாடம்

கட்டுரையாளர் தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x