Published : 06 Aug 2019 10:03 AM
Last Updated : 06 Aug 2019 10:03 AM

ஊக்கமளிக்கும் ஊக்கத்தொகை: பொறியியல் ஆராய்ச்சியாளர்களே தயாரா?

ஆராய்ச்சித் திறனும் அனுபவமும் உள்ள பொறியாளர்களுக்கு இந்தியத் தேசியப் பொறியியல் அகாடமி (ஐ.என்.ஏ.இ.) ஊக்கத்தொகை வழங்கவிருக்கிறது. ’அப்துல் கலாம் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு தேசிய ஊக்கத்தொகை 2019-20’ என்ற இந்த ஊக்கத்தொகைத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கக் குறைந்தபட்சம் இளநிலைப் பொறியியல் பட்டம் (பி.இ.) பெற்றிருக்க வேண்டும்.

இதுபோகப் பொதுத் துறை நிறுவனத்தில் ஐந்தாண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.25 ஆயிரம் ஆராய்ச்சி சம்பளமாகவும் ஆண்டுக்கு ரூ. 15 லட்சம் ஆராய்ச்சி நிதியும் வழங்கப்படும். மூன்றாண்டுகள் முதல் ஐந்தாண்டுகள்வரை இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 10 ஆகஸ்ட் 2019
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: 
Brig. Rajan Minocha
Convener cum Member Secretary (Abdul Kalam Technology Innovation National Fellowship)
Indian National Academy of Engineering (INAE)
6th Floor, Unit No. 604-609, 
SPAZE I-Tech Park,
Tower A, Sector 49, 
Sohna Road,
Gurgaon – 122018

கூடுதல் விவரம், விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய இணையச் சுட்டி: https://bit.ly/2OvOtLr

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x