Published : 30 Jul 2019 10:52 am

Updated : 31 Jul 2019 10:44 am

 

Published : 30 Jul 2019 10:52 AM
Last Updated : 31 Jul 2019 10:44 AM

ஆங்கிலம் அறிவோமே 275: அது ஒரு கெட்ட கனவு!

learn-your-english

கேட்டாரே ஒரு கேள்வி

“Doctoring என்பது தில்லுமுல்லு செய்வதைக் குறிப்பிடுகிறதாமே!  அப்படியா?”
நண்பரே, டாக்டர் என்பதை verb-ஆகப் பயன்படுத்தும்போது அதற்கு எதிர்மறைப் பொருள் உண்டுதான்.


Doctor the accounts என்றால் கணக்கில் தில்லுமுல்லு செய்தல், கள்ளக் கணக்கு எழுதுதல் என்று பொருள்.  பழச்சாறு போன்றவற்றில் தண்ணீர் கலப்பதையும் to doctor என்பார்கள்.  அதாவது ஏமாற்றும் நோக்கத்துடன் ஒன்றின் தோற்றத்தை மாற்றி அமைப்பது.  உணவுப் பொருளில் ரகசியமாக அபாயகரமான பொருளைக் கலப்பதையும் to doctor என்பதன் மூலம் குறிக்கிறார்கள்.

********************

Barber என்பவர் உண்மையில் யார்?

Hair cutting, shaving போன்றவற்றைத் தொழிலாகக்கொண்ட ஒருவரைத்தான் barber என்கிறோம் (அப்படிப் பார்க்கும்போது சிகை அலங்காரம் செய்யும் பெண்ணை barber என்பதில்லை) ஆனால், Barber என்பதற்கும், barbaric என்பதற்கும் தொடர்பு கிடையாது. Barbaric என்பது ‘மிகக் குரூரமான, மிகவும் நாகரிகமற்ற’ போன்ற அர்த்தங்களைக் குறிக்கும்.

********************

“Nightmare என்றால் என்ன?”    

மிகுந்த அச்சத்தை உண்டாக்கும் ஒரு கனவு எனலாம்.  She woke from a nightmare.  Her body was trembling மனதுக்கு மிகவும் அச்சத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தும் ஒன்றையும் nightmare என்பார்கள்.  The long journey through the storm devastated area was a nightmare.

Nightmare என்பதற்குச் சமமான சொற்களாக bad dream, ordeal, horror, torment போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

Nightmare-லிருந்து விழித்துக்கொண்ட சிறிது நேரத்துக்காவது நமக்குப் படபடப்பு குறையாது.  பதற்றம் அகலாது.

ஜெர்மானிய நாடோடிக் கதைகளில், அமைதியையும் தூக்கத்தையும் கெடுப்பதற்காகவே  அலையும் சில உயிரினங்களை வீட்டுக்குள் நுழையவிடாமல் செய்யப் பல வழிமுறைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. வீட்டின் கதவுகளில் உள்ள சாவித் துளைகளை மூடிவிட வேண்டும்.  படுக்கையில் தலைகீழாகப் படுத்துக்கொள்ள வேண்டும்.  படுக்கையில் எஃகுப் பொருளை வைத்துக்கொள்ள வேண்டும்.  படுக்கை அறைக்குள் ஒரு ஜோடி ஷூக்களை வைத்துக்கொள்ள வேண்டும்.  அந்த ஷூக்கள் கதவைப் பார்க்கும் வகையில் இருக்க வேண்டும்.

பெண் குதிரையையும் mare என்பது வழக்கம்.  ஆனால், nightmare என்பதற்கும், mare என்பதற்கும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை.

********************

“Many people in India earn less than Rs.2,000/- per month” என்று ஒரு நாளிதழில் குறிப்பிட்டிருந்தார்கள்.  இந்த வாக்கியத்தில் less than என்பதற்குப் பதில்  fewer than  என்றுதானே குறிப்பிட்டிருக்க வேண்டும்?

வாசகரே இங்கு Rs.2,000/-  என்பது ஒரு முழுமையான எண்ணாகக் கருதப்படுகிறது (அதாவது 2000 x Re.1/- என்பதல்ல).  2000 ரூபாய் என்பது ஓர் அளவையாகப் பயன்படுத்தப்படுவதால் less than  என்ற சொற்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இதேபோல “That beach is less than 60 kilometers from Chennai by road” என்பதுகூடச் சரியான பயன்பாடுதான்.

********************

“Hand towel என்பது என்ன,  கைக்குட்டையா?”

அப்படியல்ல.  மிகச் சிறிய துண்டு.  வாஷ்பேசின் அருகே கை துடைத்துக்கொள்ள வைத்திருப்பார்களே, அது போன்றது.  நீங்கள் ஹோட்டலில் தங்க நேர்ந்திருக்கக் கூடும்.   அங்கு உங்களுக்குப் பெரிய துண்டு, சிறிய துண்டு ஆகியவற்றை அளித்திருப்பார்கள்.  அவற்றில் சிறியதாக இருப்பது   Hand towel. பெரிதாக இருப்பது Bath towel.

தொடக்கம் இப்படித்தான்

Kaleidoscope என்ற சொல் மூன்று சொற்களின் இணைப்பு.  அந்த மூன்றுமே கிரேக்கச் சொற்கள்தாம்.

Kaleidoscope என்பது சிறுசிறு கண்ணாடிகளை உட்பக்கம் கொண்டது.  இந்தக் கருவியைச் சுற்றச் சுற்றக் கண்ணாடிகள் விதவிதமான வடிவங்களில் தங்களை அமைத்துக்கொண்டு வித்தியாசமான தோற்றத்தைத் தரும்.

Kalos என்றால் கிரேக்க மொழியில் அழகிய என்று பொருள்.     Eidos என்றால் தோற்றம்.  Scope என்றால் நான் வைத்திருக்கிறேன்.   இந்த மூன்றும் இணைந்ததுதான் Kaleidoscope.

சிப்ஸ்

« Parable என்றால்?
மதம் அல்லது நல்லொழுக் கத்தைப் போதிக்கும் கதை.

« Abetting என்றால் உதவுவது தானே?
ஆமாம்.  ஆனால், கெட்ட காரியங்களுக்கு உதவுவது.  பெரும்பாலும் தண்டனைக்குரியது.

« On the spur of the moment என்றால்?
முன்னதாகத் திட்டமிடாமல் திடீரென. “என் அப்பாவைப் பார்க் கணும்னு தோணுச்சு, டக்குன்னு ஊருக்குக் கிளம்பினேன்’’ என்றால் அது on the spur of the moment முடிவெடுக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்ட நிகழ்வு.

- ஜி.எஸ்.எஸ் | தொடர்புக்கு: aruncharanya@gmail.com

ஆங்கிலம் அறிவோம்ஆங்கிலம் அறிவோமேஆங்கிலப் பயிற்சிமொழிப் பயிற்சிஜி.எஸ்.எஸ் தொடர்ஆங்கிலத் தொடர்ஆங்கிலக் கல்விEnglish coachingEnglish trainingEnglish grammar checkEnglish class

You May Like

More From This Category

More From this Author