Published : 23 Jul 2019 11:02 AM
Last Updated : 23 Jul 2019 11:02 AM

வேலை வேண்டுமா ?: காதி கிராமத்தொழில்கள் ஆணையப் பணி

ஜெ.கு.லிஸ்பன் குமார் 

மத்திய அரசின் காதி, கிராமத்தொழில்கள் ஆணையத்தில் உதவி இயக்குநர், முதுநிலை நிர்வாகி, இளநிலை நிர்வாகி, உதவியாளர் ஆகிய பதவிகளில் எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கான காலியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

பட்டியலினத்தவர்களுக்கு மட்டும்

உதவி இயக்குநர், முதுநிலை நிர்வாகி, நிர்வாகி, உதவியாளர் எனப் பல்வேறு நிலைகளில் பணிகள் இடம்பெற்றுள்ளன. எஸ்.சி., எஸ்.டி. வகுப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
உதவி இயக்குநர் (கிராமத்தொழில்கள்) பதவிக்கு பி.இ., பி.டெக்., எம்.எஸ்சி., எம்.பி.ஏ. பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். உதவி இயக்குநர் (நிர்வாகம்) பணிக்கு முதுகலைப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர் ஆவர். இந்த இரண்டு பதவிகளுக்கும் கிராமத்தொழில்கள் துறையில் குறைந்தபட்சம் 5 ஆண்டு அனுபவம் அவசியம். உதவி இயக்குநர் (நிதி, பட்ஜெட், கணக்கு தணிக்கை) பதவிக்கு சி.ஏ. முடித்தவர்கள், எம்.பி.ஏ., எம்.காம். பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டு பணி அனுபவம் அவசியம். இப்பணிகளுக்கு வயது வரம்பு 40.

தகுதி

முதுநிலைப் (Senior Executive) பதவிக்கு எம்.ஏ. பொருளாதாரம், புள்ளியியல் பட்டதாரிகளும் எம்.காம். பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நிர்வாகி (கிராமத்தொழில்கள்), நிர்வாகி (காதி), நிர்வாகி (பயிற்சி) ஆகிய பணியிடங்களுக்கு பி.இ., பி.டெக்.
பட்டதாரிகள், எம்.எஸ்சி. பட்டதாரிகள், எம்.பி.ஏ. பட்டதாரிகள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
இப்பணிகளுக்குக் காதி, கிராமத்தொழில்கள் ஆணையத்தில் குறைந்தபட்சம் 3 மாதக் காலம் பயிற்சி பெற்றிருப்பது விரும்பத்தக்க தகுதியாகக் கொள்ளப்படும். வயது வரம்பு 32.

இளநிலை நிர்வாகி (நிதி, பட்ஜெட், கணக்கு, தணிக்கை) பணிக்கு பி.காம். பட்டதாரிகளும், இளநிலை நிர்வாகி (நிர்வாகம்) பணிக்கு முதுகலைப் பட்டதாரிகளும், 3 ஆண்டு பணி அனுபவம் உடைய இளங்கலைப் பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். உதவியாளர் (கிராமத்தொழில்கள்) பதவிக்கு பி.எஸ்சி. பட்டதாரிகளும், பாலிடெக்னிக் பட்டதாரிகளும், உதவியாளர் (காதி) பதவிக்கு டெக்ஸ்டைல் இன்ஜினீயரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, பேஷன் டெக்னாலஜி, ஹேண்ட்லூம் டெக்னாலஜி-இவற்றில் டிப்ளமா பெற்றவர்களும், உதவியாளர் (பயிற்சி) பதவிக்கு பி.எஸ்சி. பட்டதாரிகளும் டிப்ளமாதாரர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர் ஆவர். இந்தப் பணியிடங்களுக்கு வயது வரம்பு 32 ஆகும். 

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவர். இதற்கான ஆன்லைன் தேர்வு தமிழ்நாட்டில் சென்னை உள்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெறும். உரிய கல்வித் தகுதியும் வயது வரம்புத் தகுதியும் உடைய எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர் காதி கிராமத்தொழில்கள் ஆணையத்தின் இணையதளத்தைப் (www.kvic.org.in) பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 31 ஜூலை 2019
ஆன்லைன் எழுத்துத் தேர்வு: ஆகஸ்ட் மாதம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x