Published : 16 Jul 2019 11:37 AM
Last Updated : 16 Jul 2019 11:37 AM

வேலை வேண்டுமா ?: வனத் துறை பணி 10-ம் வகுப்பு முடித்தால் வாய்ப்பு

ஜெ.கு.லிஸ்பன் குமார் 

தமிழக அரசின் வனத்துறையில் வனக்காவலர் (Forest Watcher) பதவியில் 564 காலியிடங்கள்  தமிழ்நாடு வனச் சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமம் மூலம் நிரப்பப்பட  உள்ளன.

தகுதி

இப்பணிக்கு எஸ்.எஸ்.எல்.சி. முடித்த வர்கள் விண்ணப்பிக்கலாம். வயது 21 முதல் 30 வரையிலும் இருக்கலாம்.  பொதுப் பிரிவினர், இட ஒதுக்கீட்டுப் பிரி வினர், முன்னாள் ராணுவத்தினர் ஆகிய  அனைத்துப் பிரிவினருக்கும்  வயது உச்ச வரம்பு 30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள்  எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு  ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவர். 

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நாட்கள்: ஜூலை 20 - ஆகஸ்டு 10

மைனஸ் கிடையாது

எழுத்துத் தேர்வானது ஆன்லைன் தேர்வாக  இருக்கும்.  அதில் வினாக்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் இடம்பெறும்.   தவறான விடைகளுக்கு மைனஸ் மதிப்பெண் எதுவும் அளிக்கப்படாது.  ஆன்லைன் தேர்வு உத்தேசமாக செப்டம்பர் மாதம் நடத்தப்படும்.  இதற்கான  அனுமதிச் சீட்டு ஆகஸ்ட் முதல் வாரத்திலும்  மாதிரி ஆன்லைன் தேர்வு  ஆகஸ்ட்  இறுதியில் அல்லது செப்டம்பர் தொடக்கத்திலும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும்.

 தேர்வுக்கான அனுமதிச் சீட்டை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.  தபால் மூலமாக வீட்டுக்கு அனுப்பட மாட்டாது.  தகுதியுள்ள நபர்கள் தமிழக அரசின் வனத் துறை இணையதளத்தில் (www.forests.tn.gov.in)  விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக்கட்டணம் உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x