Last Updated : 16 Apr, 2019 09:31 AM

 

Published : 16 Apr 2019 09:31 AM
Last Updated : 16 Apr 2019 09:31 AM

ஆங்கில​ம் அறிவோமே 260: நம்பகத்தன்மை குறைந்துகொண்டே வருகிறதோ!

கேட்டாரே ஒரு கேள்வி

Enormity என்றால் மிக அதிகம் என்றுதானே பொருள்?  ஆனால், ஒரு ஆங்கிலக் கதையில் இந்தப் பொருள் சரியாகப் பொருந்தவில்லையே!

“சூப்பர் மார்கெட்டில் நிறையத் தள்ளுபடி கொடுப்பதை They are making offers, we can’t refuse என்று கூறலாம் அல்லவா?”

அந்த சூப்பர் மார்க்கெட்டில் உங்கள் நெற்றியில் துப்பாக்கியை வைத்தபடி பொருள்களை வாங்கச் சொல்கிறார்களா? ஏனென்றால் “நான் சொல்வதைக் கேட்கவில்லை என்றால் கொன்றுவிடுவேன்’’ என்ற அர்த்தம் வரும்படியான வாக்கியம்தான் “Making an offer one can’t refuse” என்பது.  முதலில் இந்த வாக்கியம் Godfather திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது.

கே.ஒ.கே. வாசகரின் குழப்பத்துக்குக் காரணம் இதுதான்.  Enormous என்றால் மிக அதிகமான என்று பொருள்.  ஆனால், enormity என்றால் அர்த்தம் வேறு.  அடாவடித்தனம் அல்லது குள்ளநரித்தனம். The enormity of serial killer’s action was staggering.

இதேபோலத் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடிய இன்னொரு வார்த்தை fulsome.  இதற்குப் பொருள் ‘முழுமையாக’ என்பதல்ல.  வெறுக்கத்தக்க என்பதாகும்.  அதாவது disgusting.

 “Peace of mind என்பதுதானே சரி?  அப்படியிருக்க a piece of mind என்று ஒரு புத்தகத்தில் படித்தேன்.  பொதுவாக அச்சுப்பிழை காணப்படாத புத்தக வெளியீட்டாளரின் நூல் அது”.

நண்பரே, இம்முறையும் அது அச்சுப்பிழையாக இல்லாமல் இருக்க வாய்ப்பு உண்டு.

Peace of mind என்பது நிம்மதி.  Sharing a piece of mind என்றால் ஒருவர் தனது சிந்தனையின் ஒரு பகுதியைப் பிறருடன் பகிர்ந்துகொள்வார் என்று பொருள்.  பெரும்பாலும் பிறரை எரிச்சல்படுத்தும்படியோ அறிவுரை கூறும்படியோ இது இருக்கும்.

ஒரு வாசகர் சுவாரசியமான ஒரு சந்தேகத்தை எழுப்பியிருக்கிறார். “Either the CEO or the Director signs the agreement என்பது ஓ.கே.  Either the CEOs or the Directors sign the agreement என்பதும் ஓ.கே.  மாறாக Either the CEO or the Directors என்று வாக்கியம் தொடங்கினால் அதைத் தொடர்ந்து இடம் பெற வேண்டியது ‘sign’ என்ற சொல்லா?  அல்லது ‘signs’ என்ற சொல்லா?”

அதாவது இரண்டும் ஒருமை என்றால் signs என்று குறிப்பிடலாம்.  இரண்டும் பன்மை என்றால் sign எனலாம்.  ஒரு சிங்குலர், ஒரு புளூரல் என்றால் என்ன செய்வது என்று கேட்கிறார்.

Verb-க்கு மிக அருகிலுள்ள subject எதுவோ அதன்படி எழுத வேண்டியதுதான்.  கீழே உள்ள இரண்டு வாக்கியங்களும் சரியானவைதான்.

Either the CEO or the Directors sign the agreement.

Either the Directors or the CEO signs the agreement.

Credibility gap என்பதன் பொருள் என்ன?

எந்த அளவுக்கு நீங்கள் நம்பகமானவராக இல்லை என்பதைப் பற்றிய மதிப்பீடு இது. ஒருவருடைய credibility gap அதிகமாக ஆக அவரைப் பற்றிய நம்பகத்தன்மை குறைந்துகொண்டே வருகிறது என்று பொருள்.

சிப்ஸ்

# அதிகச் சம்பளம் கொண்ட வேலை என்பதை ‘High pay job” எனலாமா? அல்லது “Highly paying job” எனலாமா?

High paying job

# Abolishment என்று ஒரு சொல் உண்டா, இல்லையா?

இல்லை.  அது Abolition.

# எச்சில் கையால் காக்கா ஓட்டாதவனை miser என்பதைத் தவிர, வேறெப்படி அழைக்கலாம்?

Close fisted man

 

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x