Published : 23 Apr 2019 11:02 AM
Last Updated : 23 Apr 2019 11:02 AM

வேலை வேண்டுமா? - ஸ்டேட் வங்கியில் 8904 பணியிடங்கள்

இந்தியப் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா எழுத்தர் பிரிவில் ஜூனியர் அசோசியேட் பதவிக்கான 8904 காலிப் பணியிடங்களை நிரப்பும் அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. ஆர்வமும் உரிய தகுதியும் கொண்டவர்கள் மே 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மொத்தக் காலிப் பணியிடங்கள்: 8904

கல்வி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் ஏதாவது ஒரு பாடத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 01.04.2019 அன்று, குறைந்தபட்ச வயது 20, உச்சபட்ச வயது 28. 02.04.1991 முதல் 01.04.1999 வரையான நாட்களில் பிறந்தவராக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின் படி இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் வயது வரம்பில் சலுகை உண்டு.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்.சி./ எஸ்.டி./ மாற்றுத் திறனாளி ஆகியோருக்கு ரூ. 125. பிற பிரிவினருக்கு ரூ. 750. கட்டணத்தை ஆன்லைன் வழியாக மட்டுமே செலுத்த முடியும்.

தேர்ந்தெடுக்கப் படும் முறை: ஆன்லைன் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். இந்திய நகரங்கள் பலவற்றில் நடைபெறும் இந்த ஆன்லைன் தேர்வு சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் உள்ளிட்ட தமிழக நகரங்களிலும் நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுடைய விண்ணப்பதாரர்கள் https://ibpsonline.ibps.in/sbijascapr19/ என்னும் இணையதளத்தில் ஆன்லைனில் மே 3-ம் நாளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x