உணர்வுகளை அசைக்கும் படைப்புகள்

உணர்வுகளை அசைக்கும் படைப்புகள்
Updated on
2 min read

எந்தவொரு கலை வடிவமும் சம்பந்தப்பட்ட கலைஞரின் சிந்தனைகளைப் பிரதி பலிப்பது மட்டுமல்லாமல், சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் வீச்சு கொண்டதாக இருக்க வேண்டும். அதன் வழியே நிகழும் விவாதங்களும் செயல்பாடுகளும் அந்தக் குரலை மக்களுக்கானதாக மாற்றும்.

அப்படியோர் அனுபவத் தைத் தர முயல்கிறது, சென்னை லலித் கலா அகாடமியில் நடைபெற்றுவரும் ‘உள்மெய்’ தலித் அழகியல் கலைக்காட்சி. நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் ‘வானம் கலைத் திருவிழா’ வின் ஒருபகுதியாக, இதில் நாடு முழுவதிலுமிருந்து 36 கலைஞர்கள் தங்களது படைப்பு களைக் காட்சிப்படுத்தி இருக்கின்றனர்.

நூற்றாண்டு கால வரலாற்றிலும் சரி; சமகாலத்திலும் சரி; தலித் சமூகத்தினர் எதிர்கொண்ட ஒடுக்குதல்கள் எப்படிப் பட்டவை என்பதை ஆவணப்படுத்துவதாகப் பெரும்பாலான படைப்புகள் அமைந்திருக்கின்றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in