

எங்கள் கீழத்தஞ்சை மாவட்டத்தில் அறுவடையான நெல்லை ஆண்டு முழுவதும் சாப்பாட்டுக்காகச் சேமித்து வைக்கும் மரப் பெட்டகத்தின் பெயர் ‘பத்தாயம்.’ குதிர் என்றும் சொல்வது உண்டு.
பிரம்மாண்டமான மரப்பெட்டி மாதிரி தனித்தனியாகக் கழற்றும் விதத்தில் அடுக்கு களாக இருக்கும். மேலே நெல்லைக் கொட்ட ஒரு பொந்தும், அடியில் தேவைப்படும்போது நெல்லை எடுக்க சிறிய பொந்தும் அதை மூடக் கதவும் இருக்கும்.