புதுக்கோட்டை மறந்த ‘வில்லிங்டன் சாலை’ | ஊர்க்கதைகள்

புதுக்கோட்டை மறந்த ‘வில்லிங்டன் சாலை’ | ஊர்க்கதைகள்
Updated on: 
1 min read

‘அகில புதுக்கோட்டை விவசாயிகள் காங்கிரஸ்’ 1948 ஜனவரி 9 அன்று புதுக்கோட்டையில் ஒரு மாநாட்டைக் கூட்டியது. இந்தக் காலக்கட்டத்தில் இந்திய அரசின்கீழ் சமஸ்தானமாக புதுக்கோட்டை இருந்தது. இதற்கு சென்னை மாகாணத்திலிருந்து பல தலைவர்கள் அழைக்கப்பட்டார்கள்.

அன்றைய சென்னை மாகாண உள்துறை அமைச்சர் டாக்டர் பி.சுப்பராயன் கலந்துகொண்டார். இவர்தான் இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டுக்கான பந்தல் வில்லிங்டன் சாலையில் அமைக்கப்பட்டது. இந்த மாநாட்டுக்கு ஆர்.வி. சுவாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.

மாநாட்டில் நாடிமுத்து பிள்ளை இந்திய யூனியன் கொடியை ஏற்றிவைத்தார் என்று சுதந்திர கால இதழான ‘புதுக்கோட்டைச் செய்தி’ செய்தியாக்கி உள்ளது. வில்லிங்டன் என்கிற பெயரில் தற்போது எந்தச் சாலையும் அழைக்கப்பட வில்லை.

Loading content, please wait...

X