

கடியாப்பட்டி எனும் ஊர் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலும் சுதந்திர இந்தியாவிலும் அச்சுத் துறையில் முன்னணி வகித்த ஊர் இது.
திருமயத்திலிருந்து எட்டுக்கல் தொலை வில் உள்ளது கடியாப்பட்டி. இவ்வூரிலுள்ள ‘கடியா’ என்பதற்கு என்ன பொருள் என்று தேடுகையில் இவ்வூரின் பழைய பெயர் ‘கடிகை நல்லூர்பட்டி’, ’கடிகார நல்லூர்ப் பட்டி’ என்பதாக நகரத்தார் வரலாறு கூறுகிறது.
மன்னராட்சிக் காலத்தில் இவ்வூருக்கு ராமச்சந்திரபுரம் என்று பெயர் சூட்டப்பட்டது. ஆயினும் மக்கள் இன்றும் அழைப்பது ‘கடியாப்பட்டி’ என்றுதான்.
கடிகைநல்லூர்பட்டி என்பதிலுள்ள கடிகை என்பதற்கு என்ன பொருள்? நான்மணிக்கடிகை பண்டைய தமிழ் அற இலக்கியங்களில் ஒன்று. மணிக் கடிகை, அதாவது நான்கு வகையான நீதிமணிகள் கோக்கப்பட்ட மாலை என்பது இதன் பொருளாகும். இங்கு கடிகை என்பது ‘மாலை.’