பூசணிக்காய் எங்களுக்கு... பூலோகம் உங்களுக்கு...

பூசணிக்காய் எங்களுக்கு... பூலோகம் உங்களுக்கு...
Updated on
2 min read

நகர வாழ்க்கையிலிருந்து விலகி ஒரு கிராம வாழ்க்கைக்குள் புகுந்திருந்த காலம். தெருவில் திடீர்ப் பரபரப்பு. 90 வயதுப் பாட்டி இறந்து போன செய்தியைக் கேட்டதும் ஊரே திரண்டுவிட்டது. 90 வயது என்பதால் அதை எல்லாரும் `பெரிய விசேஷம்’ என்றும் `கல்யாணச் சாவு’ என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் அந்த ஊருக்குப் போன பின் நிகழும் முதல் `பெரிய விசேஷம்’ அது.

‘கிராமம்னா டவுன் மாதிரியா, அங்கே எட்டிப் பார்த்துட்டு ஓடிருவாங்க, இங்கே எந்த வேலை சோலியென்றாலும் ஒத்தி வச்சிட்டு இப்படித் திரளுவதுதான் வழக்கம்’ என்றார்கள். `நன்மையான காரியத்துக்கு, உப்புப் பெறாத விஷயத்துக்கு நடந்த சண்டை சச்சரவைக் காரணமா வச்சுக்கிட்டு வராம இருந்தால்கூட, இந்த மாதிரி தின்மையான காரியத்துக்கு எல்லாரும் வந்திருவாங்க’ என்றார்கள்.

’வந்ததோட மட்டுமல்லாமல் அரிசி, காய்கறி என்ன, கருப்பட்டி என்ன என்று உறவுக்காரங்க எல்லாம் கொண்டுவந்து வச்சிக்கிட்டே இருக்காங்க. அதெல்லாம் செய்யவேண்டிய கட்டுகளை ஒழுங்கா செஞ்சிருவாங்க. அரிசி, காய்கறி கொடுத்தது போக பதினாறு விசேஷம் கழியும்வரை ஒவ்வொரு நாளும் யாராவது ஒரு நெருங்கின உறவுக்காரங்க பொங்கிப் போட்டு விடுவார்கள். வீட்டுக்குள்ள அடுப்பே புகையவிட மாட்டாங்க’ என்றார்கள்.

தொலைவான ஊரில் இருக்கிற ஒரு பேரன் மட்டும் வர வேண்டி இருக்கிறதென்று ராத்திரி டிரங்க் கால் போட்டுப் பேசியாயிற்று. இப்போதுபோல திறன்பேசிக் காலமில்லை அது. யாருக்குப் பேச வேண்டுமோ அவருடைய எண்ணுக்கு டிரங்க் கால் புக் பண்ணிவிட்டுக் காத்திருக்க வேண்டும். அது கிடைத்து, தொலைபேசி நிலையத்திலிருந்து ‘நீங்க பேசுங்க’ என்று லைன் கொடுத்த பிறகே பேச முடியும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in