

திண்டுக்கல் மாவட்டத்தின் சின்னாளப் பட்டி, சுங்குடி கைத்தொழிலுக்காக நாடு முழுவதும் புகழ்பெற்ற ஊர். வீதிகளில் காற்றில் ஆடும் வண்ணத் துணிகளும், ஆயிரக்கணக்கான புள்ளிகள் பிறக்கும் பெண்களின் கைநயமும் இந்த ஊருக்கு அழகையும் அடையாளத்தையும் உருவாக்கியுள்ளன.
சுங்குடிச் சேலை தயாரிப்பு நடைமுறை எளிதாகத் தோன்றி னாலும், அது பொறுமை, திறமை, அனுபவம் ஆகியவை கலந்த நுணுக்கமான கைப்பணி. பருத்தித் துணி முதலில் நெய்யப்பட்டு, அதில் கையால் சிறிய கட்டுகள் போடப்படும்.