கால்நடைகளின் ‘நொறுக்குத்தீனி’

கால்நடைகளின் ‘நொறுக்குத்தீனி’
Updated on
2 min read

கிராமங்களில் வாழும் மக்களின் முதன்மைத் தொழிலாக விவசாயம் இருந்தபோது கால்நடைகள் வளர்ப்பு என்பது துணைத்தொழிலாக இருந்தது. கனமழை காரணமாகவோ அல்லது மழையின்றியோ விவசாயம் பலன் தராதபோது கால்நடைகள்தான் பலனளிப்பதாக இருந்தன.

இன்று விவசாயம் மெல்லமெல்ல சுருங்கிக்கொண்டே வந்தாலும் கால்நடை வளர்ப்பு இன்றளவும் இருந்துவருகிறது. அதனால் ஆறு, ஓடை, ஏரி, குளம், குட்டை ஓரங்களில் நிலம் வைத்திருப்போர் மேட்டுப்பாங்கான நிலத்தில் பயிரிடுவதையும், சரிவான பகுதியில் கால்நடைகளை மேய்ப் பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

காலப்போக்கில் விவசாயத்திலும் இயந்திரங்களின் பங்கேற்பு அதிகரித்ததால் கால் நடைகளின் மேய்ச்சல் நிலப்பகுதிகளும் விளைச்சல் நிலமாகத் திருத்தம் செய்யப் பட்டன. ஆயினும் பயிர்க்காலத்தின்போது ஏரிகள், குளங்கள், ஓடை ஓரங்களையும், கோடைக் காலத்தின்போது விளைநிலங்கள், அதன் ஓரப்பகுதிகளையும் நம்பி கால்நடைகள் வளர்க்கப்பட்டுவருகின்றன.

தண்ணீர் வசதி யுடன் நஞ்சை நிலம் வைத்திருப்போர் கால்நடைகளுக்கு எனத் தீவனப்பயிர் வளர்ப்பது தற்போது வழக்கமாகிவிட்டது. இந்த வசதி இல்லாதோர் வைக்கோலைத் தீவனமாகப் பயன்படுத்துகின்றனர்.கிராமங்களில் அடித்தட்டு, நடுத்தர குடும்பத்தினர் ஆடு மாடுகள் வளர்ப்பதைத் தொழிலாகக் கொண்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலும் நடுத்தர, வயதான பெண்கள் ஆடு மேய்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். கூடுதல் எண்ணிக்கையில் ஆடுகளை வைத்திருப்போர் அதற்கு எனத் தீவனம் எதுவும் வைத்திருப்பதில்லை.

கோடைக்காலத்தில் ஆடுகளை மேய்க்கும் போது சிலவகை முள் மரங்களின் நெற்று எனப்படும் முற்றிய காய்களைச் சாக்கு மூட்டையில் அல்லது மூங்கில் கூடையில் சேகரித்து வைத்திருப்பார்கள். மழைக்காலத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்ல முடியாதபோது இவற்றைத் தீவனமாகப் பயன்படுத்தினார்கள். அன்றைய நாளில் இவ்வகையான நெற்றுகள்தான் கால்நடைகளின் ‘நொறுக்குத்தீனி’.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in