

சாமிநாதன் என்று பெயர்வைத்ததாலோ என் னவோ, சாமிகளை மட்டுமே வரையும் ஓவியராகி இருந்தார் அவர். ஊரில் இருக் கிற பெரும்பாலான கோயில் உட் சுவர்களில் வரையப்பட்டிருக்கிற தெய்வங்களை வரைந்தவர் அவரே!
நடுத்தெருவில் புதிதாக ராமர் கோயில் கட்டியபோது, ராமருடன் சீதை, லட்சுமணன், அவர்கள் அருகில் குத்த வைத்திருக்கும் அனுமன் போன்ற ஓவியத்தை சாமிநாதனிடம் வரையச் சொல்லி இருந்தார்கள். இதற்காக அவர் கேட்ட வண்ணங்களை வாங்கிக் கொடுத்திருந்தது கோயில் நிர்வாகம். அவ்வளவு தத்ரூப மாக, எதிரில் வந்து அவர்கள் நிற்பது போன்றே வரைந்திருந்தார் அந்த ஓவியத்தை!