தெருவெங்கும் ‘பல’கார மணம்! | அனுபவம் புதிது

தெருவெங்கும் ‘பல’கார மணம்! | அனுபவம் புதிது
Updated on
1 min read

சென்னை மண்ணடித் தெரு, ரமலான் மாத நோன்பை ஒட்டி மாலை 4.30 மணியளவில் களைகட்டுகிறது. சிக்கன், மட்டன், நண்டு, சிங்கிறால், காடை முட்டை என ஒவ்வொன்றிலும் விதவிதமான பலகாரங்கள். ரூபாய் 50, 60 தொடங்கி 140 ரூபாய் வரையில் இருக்கிற இப்பண்டங்கள் உணவுப்பிரியர் களுக்குச் சிறப்பான தீனி.

வழக்கமான வடை, சமோசா, லாலிபாப் சிக்கன், கிறிஸ்பி சிக்கன் தாண்டி சிக்கன் கேண்டி, ஹங்காமா சிக்கன், குனாஃபா சிக்கன், சீஸ்பால், சிக்கன் சீஸ் கட்லெட், சிக்கன் சீஸ் ரோல், சிக்கன் சாண்ட்விச் என்று நீள்கிற வகைகளின் பெயர்களே நம் நாவில் நீர் ஊற வைக்கின்றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in