

மகன், மகளுக்குத் தாய், தந்தை எழுதியது… தந்தை, தாய்க்கு மகன், மகள் எழுதியது... காதலர்களுக்கு இடையில் நடந்த கடிதப் போக்குவரத்து, நண்பர்களுக்கு இடையே அனுப்பப்பட்ட நட்புக் கடிதங்கள், தீபாவளி வாழ்த்து, பொங்கல் வாழ்த்து என 90களின் இறுதிவரை வந்த தனிமனிதக் கடிதப் போக்குவரத்து தற்போது இல்லை.
ஆனால், பட்டுவாடாவிற்காக வரும் தபால்களின் எண்ணிக்கை திறன்பேசி வருகைக்குப் பிறகும்கூடப் பல மடங்கு உயர்ந்துள்ளது. பேருந்து நிலையங்களிலும் ரயில் நிலையங் களிலும் மூட்டைமூட்டையாக வந்திறங்கும் அஞ்சல் பைகளை அந்தந்தப் பகுதி அஞ்சல் ஊழியர்கள் எடுத்துப்போவதே இதற்குச் சாட்சி.