

ஜனவரி முதல் வாரத்தி லேயே கடைகளில் பொங் கல் வாழ்த்து அட்டைகள் பல வண்ணங்களில் வந்து குவியத் தொடங்கிவிடும். கடைகளில் வழக்கமாக விற்கும் பொருள்களைச் சற்றே ஓரங்கட்டிவிட்டு, பொங்கல் வாழ்த்துகளை முதன்மையாகக் காட்சிப்படுத்துவார்கள். பெரும்பாலும் சாமி படங்கள், முக்கியமாக தன லட்சுமி, பிள்ளையார், முருகர் படங்களே நிறைய இருக்கும். வாங்குகிறோமோ இல்லையோ அதை வேடிக்கை பார்க்கவே கூட்டம் அலை மோதும்.
அதிலும் எம்.ஜி.ஆர், சிவாஜி படங்கள் உள்ள வாழ்த்து அட்டை களுக்கு ஏகக் கிராக்கியாக இருக்கும். பத்துக் காசு முதல் இரண்டு ரூபாய், மூன்று ரூபாய் வரைகூட விலை இருக்கும். பொங்கல் திருநாள், உழவர் திருநாள், தமிழர் திருநாள், திராவிடர் திருநாள் என்று விதவித மான தலைப்பில் அட்டைகள் வரும். திராவிடநாடு கோரிக்கையை அண்ணா கைவிட்ட பின், திராவிடர் திருநாள் அட்டைகள் வரத்தும் நின்று போனது.